‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். அதன்பிறகு மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என ஆக்ஷன் படங்களாக இயக்கி வந்தார். தற்போது ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற பெயரில் அவர் ஒரு ரொமான்டிக் திரைப்படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஞ்சித் தொடர்ந்து ஆக்ஷன் படங்களை இயக்கி வந்தாலும், அவர் படங்களில் வரும் ரொமான்டிக் காதல் காட்சிகள் மிகவும் ரசிக்கும்படி இருக்கும். மெட்ராஸ் படத்தில் கார்த்தி, கேத்ரின் தெரசா இடையேயான காதல் காட்சிகள், கலையரசன் - ரித்விகா இடம்பெறும் காட்சிகள், கபாலி - குமுதவள்ளியின் கெமிஸ்ட்ரி, காலாவில் வரும் ரஜினியின் காதல் காட்சிகள் என சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது அவர் முழுநீள ரொமான்டிக் படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் படத்தில் வழக்கமான டீம் இல்லாமல், புதுமுகங்களை ரஞ்சித் தேடி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வாடிவாசலில் களமிறங்கும் 'வடசென்னை ராஜன்'...?