ETV Bharat / sitara

‘இசைக் கதாசிரியர் யுவன்’ - பல தேவையில்லைகளுக்கு அவர் தேவை! #HBDYuvan 🖤

சிம்பிளான ஒரு சில விஷயங்கள் நமக்குள் எப்படி வந்தது என்ற கேள்விக்கு பதில் கிடைக்காது. அதுபோல்தான் யுவனின் இசையும். அவரின் வெறித்தனமான ரசிகர்களிடம் நீங்கள் எப்போதிலிருந்து யுவனின் ரசிகர் ஆனீர்கள் என்று கேட்டால் சற்று யோசிப்பார்கள். நம்மிடம் கேட்காமல் உரிமையோடு நமக்குள் வந்து அமர்ந்துகொண்டவர் யுவன் ❣

HBDYuvan
author img

By

Published : Aug 31, 2019, 6:31 PM IST

Updated : Aug 31, 2019, 9:02 PM IST

ஒருமுறை எனது நண்பன் என்னவென்று தெரியாத சோகத்தில் இருந்தான். அவன், ஏராளமான பாடல்களை கேட்டும், கிரிக்கெட் விளையாடியும், நண்பர்களுடன் ஜாலியாக பேசியபோதிலும் அவனுக்குள் இருந்த சோகம் தீரவில்லை. ஆனால், திடீரென ஒரு நாள் அவன் அந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்ததாகக் கூறினான். எப்படி என்று கேட்டதற்கு, “நான் பேருந்தில் செல்லும்போது தரமணி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘யாரோ உச்சிக்கிளை மேலே’ பாடலை கேட்கவேண்டும் என திடீரென தோன்றியது. அதைக் கேட்டதும் எனது சோகம் தீர்ந்தது” என்றான் அவன்.

சென்னையில் ஒருவரிடம் முகவரியைச் சொல்லி அங்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டதற்கு அந்த நபர் சொன்ன பதில், “ப்ரோ மொத்தம் நாலு யுவன் பாட்டுதான்” என்றார். அப்போது தெரிந்தது அவரும் யுவன் ரசிகன் என்று. அதற்கு பிறகு அவருடனான நட்பு ஏற்பட்டுவிட்டது. இப்படி பல உறவுகளுக்கு பாலமாக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா.

இப்போதும் யுவனின், “இது காதலா முதல் காதலா”.... என்ற பாடல் தொடங்கி அவரது குரலை கேட்டதும், ‘ச்ச யுவன் சான்ஸே இல்லை!’ என்றுதான் நாம் சொல்வோம். பொதுவாக, தமிழ் சினிமாவில் ஹீரோவால்தான் பெரும்பாலான இயக்குநர்களுக்கு ஓப்பனிங் கிடைக்கும் என்ற ஸ்டீரியோடைப்பை உடைத்தவர் யுவன்.

Yuvan
யுவன்

இசையால் ஹீரோக்களுக்கு மட்டுமல்ல இயக்குநர்களுக்கும் நல்ல ஓப்பனிங் தரலாம் என்பதை முருகதாஸ், செல்வராகவன், ராம், அமிர், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, தியாகராஜ குமார ராஜா போன்ற இயக்குநர்கள் மூலம் நிரூபித்துக்காட்டினார். யுவன் ஷங்கர் ராஜாதான் பல சிறிய படங்களுக்கு ஹீரோவாக இருந்திருக்கிறார் என்பது தனிக்கதை.

லேட் 90ஸ் முதல் 2007 வரை தமிழ் சினிமாவில் பிட் சாங்ஸ் (குறுகிய பாடல்) அதிகமாக வரத்தொடங்கின. ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரும் அந்த பாணியில் பாடல்களை கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களிடமிருந்து மாறுபட்டவர் யுவன். ஏனெனில் ஒரே படத்தில் அவரால் பல பிட் சாங்ஸ்களையும் தர முடியும்; வரிசையாக அடுத்தடுத்த படங்களில் பல்வேறு ஜானரிலும் அதையே தர முடியும்.

Yuvan
யுவன்

உதாரணத்திற்கு, காதல் கொண்டேன் படத்தில் மொத்தம் நான்கு பிட் சாங்ஸ்கள் இருக்கின்றன. ஆதி, திவ்யாவின் வீட்டிற்குச் சென்று அவள் என்ன செய்கிறாள் என்பதை பார்க்கும்போது, அவனுக்குள் வரும் ஃபீலங்ஸை

“தத்தி தத்தி தாவுதே நெஞ்சம்

தங்கச் சிலையை பார்ப்பதாலே,

விட்டு விட்டு போகுது நெஞ்சம்

வெள்ளை மனதில் வீழ்ந்ததாலே” என்று வரிகளை முடித்துவிட்டு தனது ஈர குரலால் ஒரு ஹம்மிங் செய்திருப்பார் யுவன். அதை கேட்டால் யார்தான் யுவன் மீது காதல் கொள்ளமாட்டார்கள்.

அதேபோல், “நட்பினிலே நட்பினிலே பிரிவு என்பது ஏதும் இல்லை.

உன் மனமும் என் மனமும் பேச வார்த்தைகள் தேவையில்லை

உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே ஆயிரம் எண்ணங்கள் ஓடுதடி” என நட்பின் பிரிவை உணர்த்தும் வகையில் அந்த பாடல் அமைந்திருக்கும்.

அதேபோல், தனுஷின் பிறந்தநாளை சோனியா அகர்வால் கொண்டாடும்போது,

"உன்னை தோழி என்பதா என் பாதி என்பதா

இதை காதல் என்பதா என் தேடல் என்பதா

ஒரு மேகம் போலவே மனம் மிதந்து போகுதே

மழை நின்ற போதிலும் மரக்கிளைகள் தூறுதே" என்று இருபத்தி ஆறு நொடிகளுக்கு வரும் அந்த பாடல் இன்றுவரை அத்தனை இரவுகளையும் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. முக்கியமாக, தொடாமலே ஒரு பூ எரியுதே என்ற பாடலில், சோனியா அகர்வால் மீது தனுஷ் வைத்திருக்கும், இன்னும் பெயர் சூட்டப்படாத ஒரு உறவை விளக்கியிருக்கும்.

Yuvan
U1

காதல்கொண்டேன் படத்துக்கு பிறகு, 7ஜி ரெயின்போ காலனி படத்தில் ரவி கிருஷ்ணாவிற்கு சோனியா அகர்வால் மீது ஆரம்பத்தில் வெறுப்புதான் இருக்கும். ஆனால், சோனியா கிரிக்கெட் விளையாடும்போது

"இது என்ன மாற்றம் இறைவனின் தோற்றம்
இரு விழி பார்வை விளக்குகள் ஏற்றும்
பெண்மையின் நியாயம் ரகசியம் பேசும்
அடை மழை வந்தால் குடை என்ன செய்யும்

அணைக்கின்ற போது எரிகின்ற தீயோ
பாதையின் ஓரம் பனி தின்னும் பூவோ”

என பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடிய அப்பாடலின் அளவு ஒரு நிமிடத்திற்கும் குறைவானதுதான். ஆனால் காலத்தால் அழியாத பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலை அவர் தேர்வு செய்ததன் மூலம் அந்த பாடலை பல வருடங்களாக ஒலிக்க வைத்திருக்கிறார் யுவன். தற்போது பல இசையமைப்பாளர்கள் வித்தியாசமான குரலை பிடிக்கிறார்கள் என்று கூறலாம். ஆனால் அவர்கள் படித்த பள்ளியில் சீனியர் யுவன் ஷங்கர் ராஜா.

சென்னை 28 படத்தில், நட்புக்குள்ளே ஒரு பிரிவு இங்கு வந்தது. ஏனென்று அது தெரியவில்லை என நண்பர்கள் பிரிந்த வலியை தனது விரல்களாலும், குரலாலும் ரசிகருக்கு கடத்தியிருப்பார். தன்னால் அனைத்து வகை ஜானரிலும் பிட் சாங்ஸ் தர முடியும் என யுவன் நிரூபித்திருப்பார்.

Yuvan
யுவன்

அவரது இசையில் நா. முத்துக்குமார், பா.விஜய்யை அதிகம் கொண்டாடினோம். ஆனால், சினேகனை கொண்டாடவில்லை. யுவன், சினேகன், அமீரின் காம்போவும் பல மேஜிக்குகளை தந்துள்ளது.

மெளனம் பேசியதே படத்தில் காதல் செய்தால் பாவம், ராம் படத்தில் நிழலினை நிஜமும் பிரிந்திடுமா?, ஆராரிரரோ நான் இங்கு பாட, பருத்திவீரனில் இடம்பெற்ற அனைத்து பாடல்கள் என அவர்களின் இணையும் மெகா ஹிட் அடித்தது. யுவனின் வெற்றி என்னவென்றால், இளையராஜாவை தவிர்த்து சமகால இசையமைப்பாளர்களின் பாடல்கள் ஏ,பி,சி என்ற மூன்று சென்டர்களிலும் கொண்டாடப்படுவது அரிதிலும் அரிது. ஆனால், இளையராஜாவின் ’இளைய’ ராஜாவான யுவனின் பாடல்கள் அனைத்து சென்டர்களிலும் இறங்கி அடித்தது.

இளையராஜா 1000 படங்களில் இசையமைத்தவர், ஏராளமான பாடல்களை பாடியிருப்பார். ஆனால், அவரை பறவையே எங்கு இருக்கிறாய், அறியாத வயசு புரியாத மனசு, நம்ம காட்டுல மழை பெய்யுதுது, அடடா வா அசத்தலாம் என பல்வேறு ஸ்டைலில் பாட வைத்து அழகு சேர்த்தவர் யுவன்.

Yuvan
இளையராஜாவுடன் இளைய (யுவன் சங்கர்) ராஜா

தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் மூன்று கதாநாயகிகள். அவர்களுக்கு இன்ட்ரோ தரும் வகையில் மெலடி, வெஸ்டர்ன், ஃபோக் என இசையின் மூன்று ஜானர்களை ஒரே பாடலில் உபயோகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அதன் மூலம் அவர்களது கதாபாத்திர தன்மையை கூறியிருப்பார். ஆம், யுவன் ஷங்கர் ராஜா ஒரு திரை இசை கதாசிரியர். யுவனால் புதுப்பேட்டை போன்று 10 பாடல்களை ஒரே படத்தில் கொடுக்கவும் முடியும்; அதேபோல், ஆரண்ய காண்டத்தில் பாடல்கள் இல்லாமல் பின்னணி இசை மூலம் பின்னியெடுக்கவும் முடியும்.

ஒரு இசையமைப்பாளருக்கு எங்கு இசையை வைக்க வேண்டும் என்று தெரிந்திருப்பதைவிட எங்கு இசையை வைக்கக் கூடாது என்று தெரிந்திருக்கவேண்டியது அவசியம். அப்படி, பேரன்பு படத்தில் பல இடங்களில் மௌனத்தை அவர் இசையாக்கியிருப்பார். இதே ஃபார்முலாவை சூப்பர் டீலக்ஸ் படத்திலும் அவர் தொடர்ந்திருப்பார்.

HBDYuvan
யுவன்

யுவன் (U1) இசை அதிகம் போதை தரக்கூடியது. ஆனால், அது உயிருக்கு தீங்கு விளைவிக்காமல் நோய்களை எடுக்கக் கூடியது. யுவனின் பாடல்கள் இருந்தால் போதும் காதல் கடிதம் தேவையில்லை, வயகரா தேவையில்லை, கவலை தேவையில்லை, உடனிருக்க யாரும் தேவையில்லை. இப்படி பல தேவையில்லைகளுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் தேவை.

Intro:Body:Conclusion:
Last Updated : Aug 31, 2019, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.