ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் 'நெற்றிக்கண்' - நெற்றிக்கண் பாடல்
சென்னை: நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'நெற்றிக்கண்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் 'நெற்றிக்கண்'. இந்தப்படம் ’ப்ளைண்ட்’ என்னும் கொரியப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். மிலந்த் ராவ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுபெற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன.
கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக 'நெற்றிக்கண்' திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நயன்தாரா கண்பார்வை அற்றவராக நடித்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, கிரிஷ் இசையமைத்துள்ளார்.
-
Nayanthara's #Netrikann flies to Disney+ Hotstar for a Direct OTT release.
— LetsOTT GLOBAL (@LetsOTT) June 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The team is planning for immediate premiere, mostly in July 2021. pic.twitter.com/xrX6uvRJZ7
">Nayanthara's #Netrikann flies to Disney+ Hotstar for a Direct OTT release.
— LetsOTT GLOBAL (@LetsOTT) June 11, 2021
The team is planning for immediate premiere, mostly in July 2021. pic.twitter.com/xrX6uvRJZ7Nayanthara's #Netrikann flies to Disney+ Hotstar for a Direct OTT release.
— LetsOTT GLOBAL (@LetsOTT) June 11, 2021
The team is planning for immediate premiere, mostly in July 2021. pic.twitter.com/xrX6uvRJZ7
நயன்தாரா முதன்முறையாக கண்பார்வை அற்றவராக நடித்துள்ள நிலையில், ரசிகர்களிடையே 'நெற்றிக்கண்' மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் டீஸரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகி சமூகவலைதளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனையடுத்து இப்படம் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் தளத்தில் தற்போது நேரடியாக வெளியாகவுள்ளது.
'நெற்றிக்கண்' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாட்ஸ்டாரில் வெளியாகும் நயன்தாராவின் இரண்டாவது படம் இதுவாகும். முன்னதாக 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.