ETV Bharat / sitara

'எங்களை நாங்களே ஆராய்ந்து பார்க்க வேண்டும்': மனைவியின் விவாகரத்து வாபஸ் முடிவு குறித்து நவாசுதீன் கருத்து - ஆராய்ந்து பார்க்க வேண்டும்

நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா சித்திக் விவாகரத்துக்கான தனது சட்ட அறிவிப்பை திரும்பப் பெற முடிவு செய்துள்ளார்.

’எங்களை நாங்களே ஆராய்ந்து பார்க்க வேண்டும்’: மனைவியின் விவாகரத்து வாபஸ் முடிவு குறித்து நவாசுதீன் பேட்டி

author img

By

Published : Mar 8, 2021, 2:34 PM IST

நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா சென்ற மே மாதம் விவாகரத்து, ஜீவனாம்சம் கோரி நவாசுதீனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். விவாகரத்து நோட்டீஸ் குறித்து பதிலளித்த நவாசுதீன், 'இது என் குணத்துக்கு களங்கம் விளைவிக்க மோசடியாக, வேண்டுமென்றே, திட்டமிடப்பட்டு பரப்பப்பட்ட அவதூறு' எனக் குற்றம்சாட்டினார்.

எவ்வாறாயினும் இந்த ஜோடி, வேலிகள் நிறைந்த இந்தப் பாதையை சரி செய்ய முடிவு செய்துள்ளது. ஒரு முன்னணி தினசரி நாளிதழில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், 'தனது குழந்தைகளான சோரா, யாமினிக்கு தங்களது பெற்றோர்கள் இருவரும் வேண்டும். அவர்களுக்காக எங்களது கருத்து வேறுபாட்டை தள்ளி வைக்க முடியும். அதனால் விவாகரத்து நோட்டீஸை திரும்ப பெறப்போவதாக ஆலியா முடிவு செய்துள்ளார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலியாவின் முடிவு குறித்து பதிலளித்துள்ள நவாசுதீன், 'ஆலியாவும் நானும் ஒரே மாதிரி கிடையாது. ஒருவருக்கொருவர் உடன்பட்டதும் கிடையாது. என்னுடைய குழந்தைகளே எனக்கு முக்கியத்துவமானவர்கள். எங்களால் குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது. தொடர்ந்து மோசமடைந்து வரும் எங்கள் உறவால், குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது. அவர்களை கவனித்துக்கொள்வதே எனது கடமை. நான் ஒரு நல்ல தந்தையாக இருக்க விரும்புகிறேன்.

நான் அவர்களுக்காக எப்போதும் இருப்பேன். நாம் ஒவ்வொருவரும் நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டும்''

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ’10.5% உள் ஒதுக்கீட்டுக்கு ராமதாஸ் காரணமல்ல' - வேல்முருகன் குற்றச்சாட்டின் பின்னணி இதுதான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.