விஜய்யின் ‘தமிழன்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு அவர் தமிழ் சினிமாவில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் பாலிவுட்டின் கரங்கள் அவரை அணைத்துக் கொண்டது. ’ஃபேஷன்’ படத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். ‘பர்ஃபி’, ‘மேரி கோம்’ ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, பாலிவுட்டின் தவிர்க்க முடியாத கதாநாயகி ஆனார்.
![Priyanka chopra beats sunny leone record](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5145141_2.jpg)
அதன்பிறகு, ‘குவான்டிகோ’ எனும் டிவி சீரிஸ் மூலாமாக ஹாலிவுட்டில் தடம்பதித்தார். ‘பே வாட்ச்’, ‘ஸ்கை இஸ் பிங்க்’ என அவரது ஹாலிவுட் பயணம் தொடர்கிறது. தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்ற பிரியங்கா சோப்ரா, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு அக்டோபர் வரை இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்ததாக சன்னி லியோன், தீபிகா படுகோன் ஆகியோர் இடம்பிடித்துள்ளார். இதற்கு முன்பு சன்னி லியோன் இந்தப் பெருமையை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.