ETV Bharat / sitara

மேடையில் சாந்தனுவை கலாய்த்து தள்ளிய மிர்ச்சி சிவா!

”கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு எந்தப்படமுமே வரவில்லை என்றார் சாந்தனு. ஆனால் கரோனாவால் உலகத்திலேயே கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தப்படமும் வரவில்லை” என மிர்ச்சி சிவா கலகலப்பாகப் பேசியுள்ளார்.

mirchi siva about santhanu
mirchi siva about santhanu
author img

By

Published : Sep 13, 2021, 8:19 PM IST

Updated : Sep 14, 2021, 12:01 PM IST

சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ள ’முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இதில் சாந்தனு பாக்யராஜ், பாக்யராஜ், அதுல்யா ரவி, தயாரிப்பாளர் ரவீந்திரன், தரண்குமார், யோகிபாபு, மிர்ச்சி சிவா, மனோஜ், சித்ரா லட்சுமணன், தனஞ்செயன், சிவிகுமார், ஞானவேல்ராஜா, தேனப்பன், மதுமிதா, நிதின் சத்யா, மயில்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகர்கள் பேசிவற்றைக் காணலாம்.

சாந்தனு

”என்னை வைத்து படம் செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளரிடம் சிலர் கூறியுள்ளனர். ஓடுகின்ற குதிரையை வைத்து படம் செய்யலாமே என்று கூறியுள்ளனர். என்னை நம்பி இப்படத்தை ரவீந்திரன் எடுத்துள்ளார். என்னிடமும் இதே போன்று தயாரிப்பாளரைப் பற்றி சொன்னார்கள். இதை எல்லாம் கடந்து படம் நன்றாக வந்துள்ளது.”

மேடையில் சாந்தனுவை கலாய்த்து தள்ளிய மிர்ச்சி சிவா!

யோகிபாபு

15 ஆண்டுகளுக்கு முன் வாய்ப்பு தேடி பாக்யராஜ் அலுவலகத்தில் போய் நின்றேன். ’சித்து ப்ளஸ் டூ’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தேன். இது சாந்தனுவுக்கே தெரியாது. இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கும்போது சாந்தனுவுக்கு உதவியாக இருப்பேன்.”

மிர்ச்சி சிவா

”இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது தலைப்புதான். சாந்தனு உனக்கான நேரம் இது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு எந்தப்படமுமே வரவில்லை என்றார். ஆனால் கரோனாவால் உலகத்திலேயே கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தப்படமும் வரவில்லை.”

பாக்யராஜ்

”இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் கஷ்டத்தை சொல்லச் சொன்னால் போதும் நமக்கு சிரிப்பு வந்துவிடும். அவர் அதனை அந்த அளவுக்கு நேர்மறையாக எடுத்துக்கொள்கிறார்” என்றார்.

Last Updated : Sep 14, 2021, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.