மும்பையிலுள்ள சிவாஜி பூங்காவில் நாள்தோறும் மாலைப்பொழுதில் ஆர்எஸ்எஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றதாக தனது நினைவுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் மிலிந்த் சோமன். அங்கு உடற்தகுதி, ஒழுக்கமாக நடந்துக்கொள்வது, சரியான முறையில் சிந்திப்பது போன்ற இளவயது ஆணுக்கு தேவையான விஷயங்கள் ஆர்எஸ்எஸ் ஜூனியர் தொண்டர் படையில் சேர்ந்தால் கிடைக்கும் என, எனது தந்தை நம்பியதாகத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் நாட்களின் மாலைப்பொழுதுகளில் காக்கி டவுசர் அணிந்து அணிவகுப்பு மேற்கொள்வது, யோகா, விளையாட்டுகள், பயண முகாம்கள், பாடல்கள், எதுவும் புரியாத சம்ஸ்கிருத கோஷங்கள் என சென்றது. இவற்றை மேற்பார்வை செய்பவர் அனைவருக்கும் ஊக்கமளித்து, சிறந்த பண்புகளோடு கொண்ட வீரர்களை உருவாக்குபவர் போல் இருப்பார்.
ஆனால் தற்போது அவற்றையெல்லாம் விடுத்து வகுப்பவாத பரப்புரையை மேற்கொள்வதாக அந்த அமைப்பு பற்றி ஊடகங்களில் வரும் தகவல்களை பார்க்கும்போது குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "தனது தந்தை ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஒருவராக இணைந்துக்கொண்டதுடன், இந்துவாக இருப்பதை பெருமையாக கருதினார். ஆனால் அதில் என்ன பெருமை இருக்கிறது; அதே சமயம் ஆர்எஸ்எஸ் பற்றியும் பெரிய புகார் சொல்வதற்கு என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
உலகளவில் புகழ் பெற்ற சூப்பர் மாடலாகத் திகழும் மிலிந்த் சோமன், ஆங்கிலம், தமிழ், இந்தி, மராத்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார். கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் வில்லனாக நடித்த இவர் பையா, அலெக்ஸ் பாண்டியன், வித்தகன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ஹோலிக்கும் எனக்கு ஆகவே ஆகாது - தீபிகாவை சங்கடத்தில் ஆழ்த்திய சம்பவம்