தமிழில் வெளியான 'படைவீரன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தனா. இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் தற்போது 'வானம் கொட்டட்டும்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். மடோனா செபாஸ்டியன், சரத்குமார் ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் மணி ரத்னம் தயாரிக்கிறார்.
இந்நிலையில், இப்படம் குறித்து தனா கூறுகையில், 'வானம் கொட்டட்டும்' திரைப்படம் உருவானது என் சொந்த ஊர் தேனியில் நான் சந்தித்த சில மனிதர்களை பற்றி மணிரத்னத்திடம் சொல்லியிருந்தேன். அவர் அதை ஒரு கதையாகவே என்னிடம் சென்னார். அதை கேட்டு நான் அசந்து விட்டேன். 'படை வீரன்' படத்திற்கு பிறகு என்னை அழைத்த அவர், தேனியில் வாழ்ந்த மனிதர்களை பற்றி உனக்குத்தான் நன்றாகத் தெரியும் நீ இந்தப்படத்தை இயக்கு நான் தயாரிக்கிறேன் என்றார். நடிகர்களை அவரே கூறினார். அப்படித்தான் இப்படம் தொடங்கியது என்று அவர் தெரிவித்தார்.
இப்படத்தின் மூலம் சித்ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார். தேனியில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.