மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ், அண்மையில் மாரி-2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது வி.எஸ். ரோகித் இயக்கத்தில் 'களா' (Kala) என்னும் படத்தில் நடித்துவந்தார்.
இப்படத்தின் சண்டைக் காட்சியின்போது டொவினோ தாமஸிற்கு வயிற்றுப் பகுதியில் அடிபட்டது. அதனால் அவர் அக்.7ஆம் தேதி சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். மேலும் மருத்துவர்கள் அறிவுரையின்படி சில வாரங்கள் வீட்டில் ஒய்வில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் குணமடைந்துள்ளதால் அவரது ரசிகர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டொவினோ தாமஸ் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்