வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள, 'மாநாடு' படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்துள்ளார்.
இவருடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, உதயா, பிரேம்ஜி எனப் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.
-
#MaanaaduDeepavali 🙏🏻#SilambarasanTR #Maanaadu @vp_offl @sureshkamatchi @thisisysr pic.twitter.com/Fey3ra9ckC
— Silambarasan TR (@SilambarasanTR_) September 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#MaanaaduDeepavali 🙏🏻#SilambarasanTR #Maanaadu @vp_offl @sureshkamatchi @thisisysr pic.twitter.com/Fey3ra9ckC
— Silambarasan TR (@SilambarasanTR_) September 11, 2021#MaanaaduDeepavali 🙏🏻#SilambarasanTR #Maanaadu @vp_offl @sureshkamatchi @thisisysr pic.twitter.com/Fey3ra9ckC
— Silambarasan TR (@SilambarasanTR_) September 11, 2021
இந்நிலையில் 'மாநாடு' திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவை திரையில் காண ஆர்வமாக உள்ளனர்.
ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்துள்ள, 'அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு 2018ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், 2021ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.