இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் நேற்று (டிச.6) வெளியான படம் 'இரண்டாம் உலகப்போரின் குண்டு'. இப்படத்தை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து இந்த படத்தின் முதல் காட்சியை மக்களோடு அமர்ந்து பார்த்தபிறகு இயக்குனர், ஒளிப்பதிவாளர் ஆகியோரின் மனைவியர் மகிழ்ச்சி உணர்வில் கண்ணீர் வடித்தபடி கலைஞர்களை கட்டிக் கொண்டனர்.
அப்போது அதியன்ஆதிரை தன் மனைவியின் கண்ணீரை துடைத்துவிட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.