நடிகர் ரஜினிகாந்த் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உள்பட்ட ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
![kollywood celebs voting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11307502_vote-3.jpg)
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள வாக்குச்சாவடியில் தனது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் ஆகியோருடன் இணைந்து வாக்குப்பதிவு செய்தார் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன். இதனை செஃல்பி எடுத்து தனது சமூக வலைத்தளபக்கத்தில் வெளியிட்டார் ஸ்ருதிஹாசன். வாக்களித்த பின்னர் தனது மகள்களுடன் தான் போட்டியிடும் தொகுதியான கோவை தெற்கு தொகுதிக்கு சென்ற கமல்ஹாசன், தனது தொகுதிக்கு உள்பட்ட கெம்பட்டி காலனி பகுதிக்கு சென்று வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார் . அவருடன் ஸ்ருதிஹாசனும் உடன் இருந்தார்.
![kollywood celebs voting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11307502_vote-4.jpg)
யாரும் எதிர்பாராத விதமாக தளபதி விஜய் நீலாங்கரையிலுள்ள தனது வீட்டிலிருந்து சைக்களில் வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குச்சாவடியில் ரசிகர்கள் அவரைச் சுற்றி குழுமியிருந்த நிலையில், பாதுகாப்பாக சென்று வாக்குப்பதிவு செய்த பின் பைக்கில் திரும்பினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக விஜய் சைக்களில் வந்தார் எனத் தகவல்கள் பரவிய நிலையில், குறுகலான சாலையில் கார் செல்ல முடியாத காரணத்தால்தான் சைக்களில் வந்ததாக அவரது தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
![kollywood celebs voting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11307502_vijay-1.jpg)
தல அஜித், காலை 6.30 மணிக்கே மனைவி ஷாலியுடன் திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்தார். கரோனா காலம் என்பதால் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு காலையிலேயே அவர் வந்தபோதிலும், அவரைக் காண ரசிகர்கள் அங்கு கூடியதுடன் செஃல்பி எடுக்கவும் முற்பட்டனர். அப்போது மாஸ்க் அணியாமல் செஃல்பி எடுக்க முயற்சித்த ரசிகரின் போனை பிடுங்கி ஷாக் கொடுத்தார் அஜித். அத்துடன் தன்னை சுற்றி வந்த ரசிகர்களையும் அங்கிருந்து செல்லுமாறு கூறினார். அனைவரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக வாக்களிக்குமாறு கூறிய அவர், தனது கையில் கிளவுஸ் அணிந்துகொண்டு வரிசையில் நின்று பாதுகாப்புடன் வாக்களித்தார். வாக்களிக்கும் முன் செஃல்பி ரசிகரிடமிருந்து பிடுங்கிய செல்போனை எச்சரித்த பின் அவரிடம் ஒப்படைத்தார்.
![kollywood celebs voting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11307502_vote-8.jpg)
நடிகர் சிவக்குமார் வழக்கம்போல் சூர்யா, கார்த்தி ஆகியோருடனும், பிரபு தனது மனைவி, மகன் விக்ரம்பிரபுவோடும் தங்களது வாக்கு உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தனர்.
![kollywood celebs voting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11307502_vote-6.jpg)
நீண்ட தலைமுடியுடன் கோப்ரா கெட்டப்பில் வந்த விக்ரம், வாக்குப்பதிவை செய்த பின்னர் ரசிகர்களுடன் செஃல்பி எடுத்துச் சென்றார். வெயிலின் தாக்கம் குறைந்த பின் மாலை வேலையில் தி நகரிலுள்ள இந்தி பிரச்சார சபையில் சிம்பு தனது வாக்கை பதிவு செய்தார்.
![kollywood celebs voting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11307502_vote-7.jpg)
நடிகை திரிஷா ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும், நடிகை ஆண்ட்ரியா கீழ்பாக்கத்திலுள்ள தனியார் பள்ளியிலும், சிவகார்த்திகேயன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கத்திலுள்ள தனியார் பள்ளியிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு செய்த பின்னர் வாக்களிக்க வந்த ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் செஃல்பி புகைப்படமும் எடுத்துக்கொண்டார்
![kollywood celebs voting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11307502_vote-10.jpg)
கோலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையை செய்து அதனை புகைப்படமாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
![kollywood celebs voting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11307502_vote-9.jpg)
![kollywood celebs voting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11307502_vote-1.jpg)
![kollywood celebs voting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11307502_vijay-3.jpg)
![kollywood celebs voting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11307502_vijay-2.jpg)
![kollywood celebs voting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11307502_vote-2.jpg)