ஆண்டுதோறும் புகைப்படக் கலைஞரான டபூ ரத்னானி, பாலிவுட் பிரபலங்களை வைத்து காலண்டர் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான போட்டோ ஷூட்டில், நடிகைகள் சன்னி லியோன், கியாரா அத்வானி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அந்த வகையில் நடிகை கியாரா அத்வானி ஒரே ஒரு இலையை மட்டும் பிடித்துக் கொண்டு, படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தார். அப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கிடையில் இப்புகைப்படம் திருடப்பட்டு எடுக்கப்பட்டதாக இணையத்தில் செய்தி பரவியது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ஆம்... கியாரா அத்வானி கொடுத்துள்ள அதே போஸை, சர்வதேச புகைப்படக் கலைஞர் மேரி பார்ஸின் ஏற்கனவே பயன்படுத்திவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வந்தது. அதை உறுதிசெய்யும் வகையில், மேரி பார்ஸின் தனது சமூக வலைதள பக்கத்தில், அது தன்னுடைய கான்செப்ட் என்றும், அதை திருடி டபூ ரத்னானி பயன்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ட்ரம்ப்பின் கருத்தால் ஆத்திரமடைந்த ‘பாரசைட்’ இயக்குநர்