பிக்பாஸ் 3 மூலம் பிரபலமான நடிகர் கவின், நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், 'லிப்ட்'. திகில் கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இதனையடுத்து கவினின் அடுத்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. ஊர்குருவி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள, இப்படம் முழுக்கமுழுக்க நகைச்சுவையாக உருவாகியுள்ளது.
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் விக்னேஷ் சிவனிடம் உதவியாளராக பணியாற்றிய அருண் இப்படத்தை இயக்குகிறார்.
![கவின்- விக்னேஷ் சிவன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-kavin-new-film-script-7205221_15102021102858_1510f_1634273938_295.jpg)
இதுகுறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியதாவது, "அருண் என்னிடம் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
அவரது யோசனைகளும் அவரின் தெளிவான சிந்தனையும் என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கும்.
![ஊர்குருவி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-kavin-new-film-script-7205221_15102021102858_1510f_1634273938_110.jpg)
ரவுடி பிக்சர்ஸ் சார்பில், ஊர்குருவி படம் மூலம் அவரை இயக்குநராக அறிமுகம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தில் நடிக்கத் தமிழின் முக்கியமான பெரிய நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும். இப்படம் முழுமையாகத் தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'உடன்பிறப்பே' - அமேசான் பிரைமில் வெளியீடு!