ETV Bharat / sitara

இந்தியிலும் கலக்க உள்ள 'கைதி டில்லி' - விரைவில் அறிவிப்பு

கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த கைதி திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது.

author img

By

Published : Feb 3, 2020, 7:44 PM IST

kaithi
kaithi

தீபாவளி ரேஸில் 'பிகில்' படத்துடன் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியப் படம் 'கைதி'. கார்த்தி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது, பாட்டு கிடையாது. ஆனால், இவற்றை போக்கும் விதமாக அதிரடி ஆக்‌ஷன், சென்டிமென்ட் என தனது அற்புதமான நடிப்பால், ஸ்கோர் செய்து 'டில்லி' கார்த்தி கைதட்டல் வாங்கினார்.

'மாநகரம்' திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையினரும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்தனர். படம் பார்த்த அனைவருக்கும் 'கைதி' டில்லியை பிடித்துப்போய்விட்டது.

இது ஒருபுறமிருக்க படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, பின்னணி இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட இதர டெக்னிக்கல் விஷயங்கள், சிறு வேடங்களில் தோன்றிய நடிகர்களின் பங்களிப்பு என அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கிறது என பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியான இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது.

தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தியில் ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்டும் டிரீம் வாரியர்ஸூம் இணைந்து தயாரிக்க முடிவு செய்துள்ளது. இப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரம், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் வாசிங்க: கைதி'க்கு வாழ்த்து தெரிவித்த 'மெட்ராஸ்' இயக்குநர்

Intro:Body:

Karthi's kaithi movie Hindi remake 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.