ETV Bharat / sitara

’ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கலைஞரின் பங்களிப்பு காலத்தால் அழியாதது’ - கர்ணன் பட சர்ச்சை குறித்து உதயநிதி - தென் மாவட்டங்கள் கலவரம்

”ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி
உதயநிதி
author img

By

Published : Apr 15, 2021, 2:28 PM IST

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ’கர்ணன்’ இப்படம் குறித்த சர்ச்சைகளும் ஓயாமல் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

வெடித்த சர்ச்சை

ஏப்ரல் 9ஆம் தேதி வெளியான கர்ணன் திரைப்படம், கொடியங்குளத்தில் காவல் துறையினரால் நிகழ்த்தப்பட்ட அடக்குமுறை, அதைத் தொடர்ந்த கலவரங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடங்கின. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக படத்தில் குறிப்பிடப்படாத நிலையில், 1995ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற கொடியங்குளம் சம்பவம், 1997ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்தது.

உதயநிதி ட்வீட்

சமூக வலைதளங்களில் இது குறித்த விவாதங்கள் தொடர்ந்த நிலையில், நேற்று முன் தினம் (ஏப்.13) திமுக இளைஞரணி செயலரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனக்கு கர்ணன் திரைப்படம் பிடித்திருந்ததாகவும், 1995ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கொடியங்குளம் கலவரம், 1997 திமுக ஆட்சியில் நடந்ததாக படத்தில் காட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இதுதொடர்பாக தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோரிடம் தான் இது குறித்து சுட்டிக்காட்டியதாகவும், அவர்களில் இரு தினங்களில் அதனை சரி செய்து விடுவதாகக் கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

திருத்தம் செய்த படக்குழு

எனினும், தொடர்ந்து கர்ணன் திரைப்படம் குறித்தும், கொடியங்குளம் கலவரம் குறித்தும் விவாதங்கள் தொடர்ந்த நிலையில், நேற்று (ஏப்.14) ’90களின் பிற்பகுதி’ என ஆண்டு மாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் 90களின் பிற்பகுதி என்றாலும் அது திமுகவின் ஆட்சிக் காலத்தையே குறிப்பதாக அதிருப்திக் குரல்கள் தொடர்ந்து எழுந்து வந்தன. இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து தற்போது உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ட்வீட் செய்துள்ளார்.

அதில், ”கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995இல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997இல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் - இயக்குனர் இருவரிடமும் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்.

கர்ணன் திரைப்படம் குறித்த உதநிதி ஸ்டாலினின் ட்வீட்

படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995இல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும் '90களின் இறுதியில்' என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்திக் குரல்கள் எழுகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கொடியங்குளம் கலவரம்: 'கர்ப்பிணிப் பெண்னை பூட்ஸ் காலால் உதைச்சாங்க' - பத்திரிக்கையாளரின் நேரடி சாட்சியங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.