ETV Bharat / sitara

விஜய் புத்திசாலி நடிகர், அட்லி சூப்பர் ஸ்டார் டைரக்டர் - கரண் ஜோஹர் புகழாரம்! - பிகில் திரைப்பட விமர்சனம்

'பிகில்' விடுமுறையை கொண்டாடும் ஒரு அற்புதமான திரைப்படம் என இயக்குநர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.

bigil
author img

By

Published : Oct 31, 2019, 3:42 PM IST

விஜய் - அட்லி கூட்டணியில் தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும் இத்திரைப்படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்துவருகிறது.

  • What an absolute festive joy #BIGIL is!!A roller coaster of emotions, triumph and an unparalleled adrenalin rush! #ThalapathyVijay is in top form and makes you want to whistle along! He is BRILLIANT! @Atlee_dir goes on to prove he is the master of This game!! SUPERSTAR DIRECTOR

    — Karan Johar (@karanjohar) October 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனையடுத்து இப்படத்தை பார்த்த பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர், தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதில், பிகில் விடுமுறையை கொண்டாடும் ஒரு அற்புதமான திரைப்படம். ரோலர் கோஸ்டர் போல் எமோஷன் காட்சிகளும், ஈடு இணையில்லாத ஆக்ஷன் காட்சிகளும் அடங்கிய இந்தப் படத்தில் விஜய்யின் நடிப்பு மிக அற்புதம். விஜய் ஒரு புத்திசாலி நடிகர் என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார்.

இப்படத்தின் இயக்குநர் அட்லி தனது திறமையை நிரூப்பித்தது மட்டுமில்லாது இந்த ஸ்போர்ட்ஸ் படத்தின் மாஸ்டராக உள்ளார். அட்லி ஒரு சூப்பர் ஸ்டார் டைரக்டர் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிங்க: சினிமாவின் வெற்றி 'அசுரன்' தயவு செய்து பாருங்கள் - கரண் ஜோஹர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.