ETV Bharat / sitara

'கரகாட்டக்காரன்-2' எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை -ராமராஜன் - ராமராஜன்

'கரகாட்டக்காரன்-2' எடுப்பதில் தனக்கு துளி அளவும் விருப்பம் இல்லை என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.

ராமராஜன்
author img

By

Published : Jun 25, 2019, 9:53 AM IST

Updated : Jun 25, 2019, 10:16 AM IST

நல்லப் படங்களை எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் மக்கள் அப்படத்தை தூக்கி வைத்துதான் கொண்டாடுவார்கள் என்பதற்கு உதாரணம் கரகாட்டக்காரன் என்று சொல்லலாம். 1989 ஜூன் 16ஆம் தேதி வெளிவந்த 'கரகாட்டக்காரன்' திரைப்படம் 425 நாட்கள் ஓடி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சனில் வெற்றி வாகை சூடியது.

இயக்குநர் கங்கை அமரன் இயக்கிய இப்படத்தை விஜயா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், வாகை சந்திரசேகர், சண்முகசுந்தரம், கோவை சரளா என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.

இப்படத்தை எளிய மக்கள் கொண்டாடித் தீர்த்தனர். கவுண்டமணி செந்திலின் வாழைப்பழம் காமெடியை இன்றுவரை கொண்டாடி மகிழ்கின்றனர் அனைத்துவகை ரசிகர்களும். எந்த ஒரு ஆடம்பரச் செலவும், பிரமாண்டமும் இல்லாமல், எளிமையான எழுத்து நடையில் நகைச்சுவையுடன் மக்களை மகிழ்ச்சியூட்டிய திரைப்படம் இது.

'தில்லானா மோகனாம்பாள்' கதையை ஒத்திருந்தபோதும் கிராமிய வாசனையும், நகைச்சுவையுணர்வுடன் கூடிய கிராமக் காவியமாகவே இத்திரைப்படம் படைக்கப்பட்டிருந்தது.

ராமராஜன்
ராமராஜன்

இசைஞானி இளையராஜாவின் இசையில் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து வெற்றிபெற்ற இப்படம் வெளிவந்து முப்பது வருடங்களைக் கடந்துவிட்ட நிலையில், சமீபத்தில் 30ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் நடிகர் ராமராஜனும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'கரகாட்டக்காரன்-2 படம் குறித்து இயக்குநர் கங்கை அமரன் என்னிடம் பேசியிருந்தார். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

சில விஷயங்களை திரும்பத் தொடுவது சரியாக இருக்காது. அதுபோலத்தான் கரகாட்டக்காரன்-2 படம். கரகாட்டக்காரன் பார்ட் டூ மீது துளி அளவும் எனக்கு விருப்பம் இல்லை' என அவர் தெரிவித்தார்.

Intro:Body:

ssss

Conclusion:
Last Updated : Jun 25, 2019, 10:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.