நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த 'கோமாளி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து 'பூமி' திரைப்படத்தில் ஜெயம் ரவி கவனம் செலுத்திவருகிறார்.
இது அவரின் 25ஆவது படம் என்பதால், படத்தில் கூடுதல் அக்கறை காட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தினை 'ரோமியோ ஜூலியட்', 'போகன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லஷ்மன் இயக்குகிறார். இப்படத்தினை ஹோம் மூவி பேனர்ஸின் கீழ் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். துரைராஜ் கலை இயக்குநராகப் பணிபுரிகிறார்.
டி. இமானின் இசையில் பாடல்களை தாமரையும் மதன் கார்க்கியும் எழுதுகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் நிலையில் நாளை (நவம்பர் 1) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது.
-
The official title of #JR25 is #Bhoomi #பூமி
— Jayam Ravi (@actor_jayamravi) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Dir @dirlakshman @AgerwalNidhhi Prod @theHMMofficial @sujataa_hmm
| @immancomposer | @dudlyraj | @Stunsiva8 | @BrindhaGopal1 | @prathool | @onlynikil | @shiyamjack pic.twitter.com/GHnUb9fuqI
">The official title of #JR25 is #Bhoomi #பூமி
— Jayam Ravi (@actor_jayamravi) October 11, 2019
Dir @dirlakshman @AgerwalNidhhi Prod @theHMMofficial @sujataa_hmm
| @immancomposer | @dudlyraj | @Stunsiva8 | @BrindhaGopal1 | @prathool | @onlynikil | @shiyamjack pic.twitter.com/GHnUb9fuqIThe official title of #JR25 is #Bhoomi #பூமி
— Jayam Ravi (@actor_jayamravi) October 11, 2019
Dir @dirlakshman @AgerwalNidhhi Prod @theHMMofficial @sujataa_hmm
| @immancomposer | @dudlyraj | @Stunsiva8 | @BrindhaGopal1 | @prathool | @onlynikil | @shiyamjack pic.twitter.com/GHnUb9fuqI
இதையும் படிங்க: அனிருத்தின் அடுத்த ஹிட் பாடல் ரெடி - இசையமைப்பாளர் சாம்