மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் நண்பரும், உதவியாளருமான கல்யாண கிருஷ்ணன் 2015ஆம் ஆண்டு ஜெயம் ரவி வைத்து பூலோகம் திரைப்படத்தை இயக்கினார்.
அவர் தற்போது ஜெயம் ரவியை வைத்து படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்துக்கு தற்காலிகமாக JR 28 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்தச் சூழலில் ரவியுடன் ப்ரியா பவானி சங்கர் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'ஸ்க்ரீன் சீன்' தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் அஹமத் இயக்கத்தில் ஜன கண மன, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் ஜெயம் ரவி கமிட்டாகியிருக்கிறார்.
இதற்கு முன்னதாக ஜெயம் ரவி நடித்து ஓடிடியில் வெளியான பூமி திரைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: நடிகைக்கு ’ஆபாச குறுஞ்செய்தி’ அனுப்பிய மாணவர் கைது