'வெயில்', 'அங்காடி தெரு' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் வசந்த பாலன். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியாக தயாராகவுள்ளது. இதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து, இசையமைத்துள்ளார்.
இப்படத்தை கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஶ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார்.படத்தில் இடம்பெற்றுள்ள, 'காத்தோடு காத்தானேன்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
![ஜெயில் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-jail-gv-studio-script-7205221_24102021174315_2410f_1635077595_353.jpg)
இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா பெற்றுள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க :'விருதை எதிர்பார்க்கவில்லை, கே.பி. சார் இல்லாதது வருத்தம்'- தாதா சாகேப் ரஜினிகாந்த்!