கரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் ஓடிடி தளங்களுக்கு இடையே கடுமையான போட்டி ஆரம்பமானது. அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், ஜீ5 உள்ளிட்ட தளங்கள் இந்திய ரசிகர்களிடையே பிரதானமாக உள்ளது.
தெய்வமகள், மாயா உள்ளிட்ட சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமான வாணி போஜன் தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இவர் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ச் தயாரிப்பு நிறுவனம் சார்பில், சாருகேஷ் சேகர் இயக்கும் 'ட்ரிபிள்ஸ்' என்ற நகைச்சுவை கலந்த காதல் தொடரில் நடித்துள்ளார். இவருடன் ஜெய், விவேக் பிரசன்னா, சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் தொடர் விரைவில் வெளியாக உள்ளது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்திற்காக இயக்குநர்கள் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ், நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரை வைத்து 4 புதிய வெப் சீரியஸை உருவாக்கியுள்ளனர். இது நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.
ஓடிடி தளத்தில் வெளியாகும் வாணி போஜனின் 'ட்ரிபிள்ஸ்' - ஜெய் ட்ரிபிள்ஸ்
சென்னை: ஜெய் - வாணிபோஜன் நடிப்பில் உருவாகியுள்ள 'ட்ரிபிள்ஸ்' நகைச்சுவை கலந்த காதல் தொடர் நவம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.