ETV Bharat / sitara

2ஆம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம் - இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படக்குழு
author img

By

Published : May 8, 2019, 1:44 PM IST

நீலம் புரொடக்ஷன் மூலம் இயக்குநர் பா.இரஞ்சித் படங்களை தயாரித்து வருகிறார். முதல் படமான பரியேறும் பெருமாள், வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கிருந்தார். இந்த வெற்றிப் படத்தை தொடர்ந்து, 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு' எனும் புதிய படத்தை தயாரிக்கிறார் பா.இரஞ்சித். இப்படத்தில் இயக்குநராக அதியன் ஆதிரை, ஒளிப்பதிவாளராக கிஷோர்குமார், இசையமைப்பாளராக டென்மா ஆகியோரை அறிமுகமாகின்றனர்.

'அட்டக்கத்தி' தினேஷ் லாரி ஓட்டுநராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். சொந்தமாக லாரி வாங்க வேண்டும் என்னும் கதாநாயகனின் கனவு நிறைவேறியதா என்பதுதான் படத்தின் ஒருவரிக் கதை. லாரி ஓட்டுநரின் வாழ்க்கை மூலமாக பல சமூக அவலங்களை பேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டாக்கிங் போர்ஷன், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.

தற்போது இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. அடுத்து பின்னணி இசை உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் முடித்து விட்டு, விரைவில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

irandam ulaga porin kadaisi gundu
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தன்னிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் மாரி இயக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார் பா.இரஞ்சித். இப்படத்தில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.