ETV Bharat / sitara

ஏ.ஆர்.ரஹ்மான் மாணவரின் 'அடியே குட்டி தேவதை' சுயாதீன இசைப் பாடல் வெளியீடு - ரஹ்மான் மாணவரின் தனிப்பாடல் வெளியீடு

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கல்லூரியின் மாணவர் எட்வின் லூயிஸின் 'அடியே குட்டி தேவதை' எனும் சுயாதீன இசைப் பாடலை திங்க் மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

independent-single-track-from-edwin-louis-released-in-think-music

author img

By

Published : Jun 12, 2020, 12:37 PM IST

சென்னையை சேர்ந்த எட்வின் லூயிஸ் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கல்லூரியின் மாணவர் ஆவார். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலான தீவிர இசைப் பயிற்சி, சிறந்த இசைக் கல்வி, இணையவழி இசை மேலாண்மை செயல்முறை பாடம் என பல பயிற்சிகளையும் பெற்று பன்முகக் கலைஞராக விளங்கும் இவர், 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவுகளின்கீழ் இன்று வரை பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.

தற்போது எட்வின் லூயிஸின் 'அடியே குட்டி தேவதை' எனும் மனம் வருடும் சுயாதீன இசைப் பாடலை திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது.

இது குறித்து பேசிய எட்வின் லூயிஸ், ”இந்த இசைக் குடும்பத்திலிருந்து என் இசைப் பயணத்தை தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்களைப் போன்ற இளம் கலைஞர்களுக்கு இவர்கள் தரும் மதிப்பு அசாதாரணமானது. திங்க் மியூசிக் இணைப்பில் என்னுடைய பாடல் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்று இன்னும் பல தரப்பட்ட இசைப் படைப்புக்களை நான் அளிக்கவுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

எட்வின் லூயிஸின் பேராசிரியர் பிரேம் கூறுகையில், ”எட்வின் இயல்பிலேயே நல்ல இசை கலைஞர். எப்போதும் கேட்போரை மனதில் வைத்து இசையமைப்பவர். எங்கள் வகுப்புகளில் நடைபெறும், ’வாரம் ஒரு பாடல்’ பிரிவில் எல்லா வாரமும் ரசிக்கும்படியாகவும், ஜனரஞ்சகமான பாடல்களையும் தருவார். அவரது டியூன் சுத்தமாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.

அவருடைய பாடல்கள் மட்டுமல்ல, அவரது பின்னணி இசையும் அற்புதமாக இருக்கும். எட்வின் லூயிஸ் எதிர் காலத்தில் முக்கியமான இசையமைப்பாளராக இடம் பிடிப்பார் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை” என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... துணை நடிகையை ஏமாற்றிய நடிகர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.