சென்னை : ஸ்ரீ என்கிற ஸ்ரீராம் நடராஜன் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இதையடுத்து, மிஷ்கின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், லோகேஸ் இயக்கித்தில் மாநகரம் போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். பின்பு தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் தமிழ் 1 நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
இன்று இவர் தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : இது தலைவர் திருவிழா: 'அண்ணாத்த' ட்ரெய்லர் பார்த்த மகிழ்ச்சியில் தனுஷ்