'மாப்பிள்ளை' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர், ஹன்சிகா. இதனையடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து சுமார் 50 படங்களில் நடித்துள்ளார்.
இவரது 50 ஆவது படமான மகா, தற்போது வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது. இதனையடுத்து அவரது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரவுடி பேபி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் ராஜா சரவணன் இயக்குகிறார். இதில் ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்.5) பூஜையுடன் தொடங்கியது. சாம் சி.எஸ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். படப்பிடிப்பு, இதர பணிகள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : நடிகைக்கு திடீர் திருமணம் - வைரலாகும் புகைப்படம்