ETV Bharat / sitara

ஹாலிவுட்டில் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ், நெப்போலியன் - ஜி.வி.பிரகாஷ்

ரிக்கி பர்செல் இயக்கியுள்ள 'ட்ராப் சிட்டி' என்ற ஹாலிவுட் படத்தில் நடிகர்கள் நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்துள்ளனர்.

gv-prakash
gv-prakash
author img

By

Published : Feb 6, 2020, 9:19 AM IST

தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எஜமான், போக்கிரி, சீமராஜா உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் நெப்போலியன் ஹாலிவுட்டில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ளார்.

அமெரிக்காவில் வசித்துவரும் அவர், ஹாலிவுட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தற்போது முதன் முறையாக ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார்.

Napoleon, GV Prakash
ஜி.வி.பிரகாஷ் - நெப்போலியன்

இயக்குநர் ரிக்கி பர்செல் இயக்கியுள்ள 'ட்ராப் சிட்டி' என்ற ஹாலிவுட் படத்தில் நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சர்வதேச தரத்தில் உருவாகியுள்ள இப்படத்தை கைபா பிலிம்ஸ் (Kyyba Films), நாசிக் ராவ் மீடியா (Nasik Rav Media) மற்றும் கிங்டம் ஓவர் எவ்ரிதிங் (Kingdom Over Everything - KOE) ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்தப்படத்தில், டிராபிக் தண்டர், பர்சி ஜாக்சன் மற்றும் பிக் மாமா ஹவுஸ் போன்ற பிரபல ஆங்கில படங்களில் நடித்துள்ள பிராண்டன் டி ஜாக்சனும் நடித்துள்ளார்.

Trap City
ட்ராப் சிட்டி படத்தில் நடிக்கும் நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ்

'ட்ராப் சிட்டி' ஏழ்மையில் வாடும் ஒரு ராப் பாடகரின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. அந்த பாடகர், வறுமையின் காரணமாக ஒரு போதைப்பொருள் கும்பலின் தலைவனிடம் வேலைக்கு சேர்கிறார். வேலைக்குச் சேர்ந்தபின், அவர் எழுதிய ஒரு பாடல் உலகெங்கும் பிரபலமாகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக, அவர் பாடல் பிரபலமாகும் தருணத்தில் கைது செய்யப்படுகிறார். மேலும், அவரைக் கொலை செய்யும் முயற்சியும் நடக்கிறது. அதன்பின் அந்த பாடகர் என்ன செய்கிறார், எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அமெரிக்காவில் படமாக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும், 'ட்ராப் சிட்டி' இந்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க...

பொதுத் தேர்வு ரத்து - வரவேற்பு தெரிவித்த சூர்யா, தனுஷ்

Intro:ஹாலிவுட்டில் களமிறங்கும் ஜி.வி பிரகாஷ்.Body:தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் நெப்போலியன் முதல்முறையாக ஜீ வி பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தில் நடித்துள்ளார்.

சர்வதேச தரத்தில் இருக்கும் இப்படத்தை கைபா பிலிம்ஸ் (Kyyba Films), நாசிக் ராவ் மீடியா (Nasik Rav Media) மற்றும் கிங்டம் ஓவர் ஏவரிதிங் (Kingdom Over Everything - KOE) என மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ட்ராப் சிட்டி (Trap City) என பெயர் சூட்டி உள்ளார்கள்.

ரிக்கி பிற்செள் (Ricky Burchell) இப்படத்தை எழுதி இயக்கியுள்்ள இந்த படத்தில், ஜிவி பிரகாஷ் மற்றும் நெப்போலியன் உடன் சேர்ந்து டிராபிக் தண்டர் (Tropic Thunder), பர்சி ஜாக்சன்(Percy Jackson) மற்றும் பிக் மாமா ஹவுஸ் (Big Momma House) போன்ற பிரபலமான ஆங்கில படங்களில் நடித்துள்ள பிராண்டன் டி ஜாக்சனும் (Brandon T Jackson) நடித்துள்ளார்.

ஏழ்மையில் வாடும் ஒரு ராப் பாடகனின் கதைதான் ட்ராப் சிட்டி. இந்த பாடகன், வறுமையின் காரணமாக ஒரு போதைப்பொருள் கும்பலின் தலைவனிடம் வேலைக்கு சேர்கிறான். வேலைக்கு சேர்ந்தபின் , அவன் எழுதிய ஒரு பாடல் உலகெங்கும் பிரபலமாகிறது. ஆனால், துரதிஸ்டவசமாக, அவன் பாடல் பிரபலமாகும் போது அவன் கைது செய்யப்படுகிறான். அவன் குற்றத்தின் நிமித்தம் அவன் புகழும் பரவுகிறது. இப்படி இருக்க, அவனை கொல்ல ஒரு முயற்சி நடக்கிறது. அதன்பின் அந்த பாடகன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.
இந்த படத்தின் படப்பிடிப்புு முழுவதும் அமெரிக்காவில் படமாக்கப்பட்டிருக்கிறது.

படப்பிடிப்பு முடிந்து படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

Conclusion:ட்ராப் சிட்டி இந்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.