சென்னை: புதுமுகங்கள் நடிப்பில் குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை விவரிக்கும் விதமாக உருவாகி வரும் ‘கிரீன் சில்லிஸ்’ விரைவில் திரைக்கு வரவுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் வாழும் நந்தா எனும் ஆட்டோக்காரனுக்கும் அதே ஆட்டோவில் தினமும் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தை யமுனாவுக்கும் இடையே மலரும் அன்பின் வெளிப்பாடே ‘கிரீன் சில்லீஸ்’ திரைப்படத்தின் ஒன்லைன்.
இந்தப் படம் குழந்தைகள் பாலியலை தோலுரித்து காட்டும் விதமான கதையம்சம்துடன் உருவாகியுள்ளது. குழந்தைகளை தொடும்போது குட் டச், பேட் டச் வித்தியாசத்தை சொல்லும் விதமான காட்சிகள் இடம்பிடித்துள்ளதாக
கதையின் நாயகனாக லெனின் என்பவர் ஆட்டோ ஓட்டுநர் நந்தா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக ககன தீபிகா நடித்துள்ளார். இவர் கதாநாயகனின் முறைப்பெண்ணாக தோன்றுகிறார்.
முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் விலைமாது மகியாக, டெல்லியைச் சேர்ந்த திவ்யாங்கனா என்பவர் நடித்துள்ளார். மலையாளத்தில் பிரபல நடிகரான சாய்குமாரின் பேத்தி நந்தனா தும்பி, நூற்றுக்கணக்கான படத்தில் நடித்த காமெடி நடிகர் சாப்ளின் பாலு, குழந்தைகளை விற்கும் புரோக்கராக சஞ்சய் ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.
புதுமுகங்களான ஃபரூக், தினேஷ் நந்தித், பேபி தேவநந்தா, பேபி அனுக்ரகா, பேபி கார்த்திகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஒளிப்பதிவு - பினேஷ் தம்பி, இசை - ஜி. ராம். பாடல்கள் - சஞ்சய்ராம், பாலா சீதாராமன்
தயாரிப்பு - ஜி.எஸ். சினிமா இண்டர் நேஷனல், ரெட் குளோபல் நெட்ஒர்க். கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் - சஞ்சய் ராம்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், ஆலப்புழா ஆகிய இடங்களில் 35 நாட்களில நடைபெற்று முடிவடைந்தது. விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ’புலிகேசியை மனதில் இருந்து அழித்துவிட்டேன்...' - விரக்தியில் வைகைப்புயல்!