சென்னை: சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் பிரபல தொலைக்காட்சி நாடகத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை வி.ஜே. சித்ரா. இவர் திடீரென சென்ற ஆண்டு உயிரிழந்தார்.
இவர் இறப்பதற்கு முன் முதன்முதலில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடித்த படம் கால்ஸ். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆனால் இதனை பார்க்க சித்ரா உயிருடன் இல்லையே என்று அவரது ரசிகர்கள் கண்கலங்கிவருகின்றனர். இந்நிலையில் இப்படம் வெளியாவதை ஒட்டி சென்னையில் உள்ள திரையரங்குகளில் பெண்களுக்கு இலவசமாக இன்றும் நாளையும் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வி.ஜே. சித்ராவின் 'காலங்கள் கரைகிறதே'