ETV Bharat / sitara

நாளை வெளியாகிறது 'நேர்கொண்ட பார்வை' நான்காவது பாடல்..!

சென்னை: அஜித் நடித்து வெளியாகவுள்ள ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் நான்காவது பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jul 24, 2019, 2:17 PM IST

நேர்கொண்ட பார்வை

பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்திய 'பிங்க்' திரைப்படம், தமிழில் அஜித் நடித்து ’நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இதுவரை வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நான்காவது பாடல் நாளை வெளியாகவுள்ளது. இந்த பாடலுக்கு 'அகலாதே' என தலைப்பிட்டுள்ளனர்.

நேர்கொண்ட பார்வை
நேர்கொண்ட பார்வை

முதன்முறையாக வித்யாபாலன் இடம்பெற்றுள்ள போஸ்டர் வெளியாகியுள்ளதால், இந்தப் பாடல் அஜித் - வித்யா பாலன் ஆகியோரின் காதல் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதுவரை வெண்தாடியுடன் தோன்றிய அஜித், இன்று வெளியான போஸ்டரில் சிறிது இளமையாக தோன்றியுள்ளது ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.