ETV Bharat / sitara

'புஷ்பா' அல்லு அர்ஜூனுக்கு வில்லானகும் ஃபகத் பாசில்!

author img

By

Published : Mar 21, 2021, 12:03 PM IST

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகிவரும் 'புஷ்பா' படத்தில் வில்லன் கதபாத்திரத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிக்கவுள்ளார்.

Pushpa
Pushpa

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'ரங்கஸ்தலம்' படத்துக்கு பிறகு சுகுமார் இயக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை இந்தாண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், புஷ்பா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஃபகத் பாசில் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஃபகத் பாசில் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.