ETV Bharat / sitara

ஃபகத் - நஸ்ரியா ஜோடியின் ‘டிரான்ஸ்’ - சென்சார் முடிந்து புதிய அப்டேட் - best malayalam cinemas

‘பெங்களூர் டேஸ்’ திரைப்படத்துக்குப் பின் ஃபகத் - நஸ்ரியா ஜோடி மீண்டும் இணைந்து நடித்துள்ள ‘டிரான்ஸ்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Fahad - nazriya combo - update in trance

author img

By

Published : Feb 12, 2020, 7:55 PM IST

மலையாள திரையுலக ரசிகர்களின் மனம் கவர்ந்த காதல் ஜோடி ஃபகத் பாசில் - நஸ்ரியா. நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஃபகத் - நஸ்ரியா இருவரும், 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு நஸ்ரியா திரைத்துறைக்கு முழுக்கு போட்டுவிட்டார். அதன்பிறகு 2018ஆம் ஆண்டு அஞ்சலி மேனன் இயக்கிய ‘கூடே’ படத்தின் மூலம் நஸ்ரியா மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அதே ஆண்டு ஃபகத் பாசிலை வைத்து ‘வரதன்’ எனும் படத்தை தயாரித்தார். அதன்பிறகு சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ‘கும்பளங்கி நைட்ஸ்’ எனும் திரைப்படம் நஸ்ரியா தயாரிப்பில் வெளியானது.

2014ஆம் ஆண்டு அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான ‘பெங்களூர் டேஸ்’ படத்தில் கடைசியாக ஃபகத் - நஸ்ரியா ஜோடி இணைந்து நடித்திருந்தது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ள படம் ‘டிரான்ஸ்’. அன்வர் ரஷீத் தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் ஃபகத், நஸ்ரியா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Fahad - nazriya combo - update in trance
Fahad - nazriya combo - update in trance

காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘டிரான்ஸ்’ திரைப்படத்தில் திருவனந்தபுரம் சென்சார் கமிட்டியால் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் மும்பையில் உள்ள சென்சார் குழு இந்தப் படத்தை பார்த்துவிட்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இந்நிலையில், இந்தப் படம் பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.