நெடுநல்வாடை படம் குறித்து இயக்குநர் செல்வ கண்ணணிடம் ஈடிவி பாரத்தின் சிறப்பு பேட்டி, நெடுநல்வாடை கதை உருவான விதம் எப்படி?
தாத்தாவிற்கும் பேரனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்புதான் இந்தப் படம். நான் எனது தாத்தாவை இன்ஸ்பிரேஷனாக வைத்து அவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை படமாக எடுத்துள்ளேன்
இப்படத்தில் அதிகம் நெல்லை வட்டார வழக்கு பயன்படுத்தியது ஏன்?
திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி காரன் நான் . இதுவரை தமிழ் சினிமாவில் நெல்லைத்தமிழ் சரிவர கையாளப்படவில்லை. மதுரை தமிழ், 'சுப்பிரமணியபுரம்', 'பருத்திவீரன்' ஆகிய படங்களில் மூலம் சிறப்பாக மதுரையில் பேசப்படும் வட்டார வழக்கு கையாளப்பட்டது.
தங்கர்பச்சான் 'வட ஆற்காடு' கடலூர்ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வட்டார வழக்குகளை சிறப்பாகக் கையாண்ட படங்களும் வெளிவந்துள்ளது. திருநெல்வேலி வட்டார வழக்கை கவனத்தில் கொண்டு இதுவரை யாரும் செயல்படவில்லை வந்த படங்கள் அனைத்தும் ஆக்ஷன் படங்களாக வந்ததால் அதில் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நான் கதை எழுதும் போது திருநெல்வேலியையொட்டிதான் படமெடுக்க இருந்ததால் மொழி மீது அதிக கவனம் எடுத்துக்கொண்டேன். திரைக்கதையை எழுதுவதற்கு எனக்கு இது ஈசியாக இருந்தது இதையே பேசி நடிப்பதற்கு நடிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர்.
படப்பிடிப்பிற்கு முன்பே நடிகர் நடிகையிடம் படத்தின் முழு ஸ்கிரிப்டும் கொடுத்து வசனம் பேச கற்றுக்கொடுத்தேன். நடிகர் பூ ராமு மட்டுமே 15 நாள் இந்த படத்திற்காக டப்பிங் பேசியுள்ளார் அவர் ஒரு படத்திற்கு வழக்கமாக 4 அல்லது 5 மணி நேரம் மட்டுமே டப்பிங் பேசி உள்ளதாக அவரேஎன்னிடம் கூறினார்.
இந்த ஐந்து நண்பர்களை வைத்து மீண்டும் மற்றுமொரு படம் இயக்க வாய்ப்புகள் உள்ளதா?
கண்டிப்பாக இருக்கிறது இந்த நிறுவனம் எங்கள் நட்பின் அடையாளம் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு போக வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கத்தில்இருக்கிறோம். எங்கள் நண்பர்கள் வட்டாரம் பெருசு இப்போது நாங்கள் 50 பேர் செய்து இருக்கிறோம் கல்லூரியில் நான் படித்தபோது என் கிளாஸ்மேட்ஸ் 150 பேரு, இதில் 50 பேர் சேர்ந்து நாங்கள் படம் எடுத்து இருக்கிறோம்.
அடுத்த படம் எப்படிப்பட்ட படமாக எடுக்க உள்ளீர்கள்?
நான் மாறுபட்ட கதைகளை எடுக்கவே விரும்புகிறேன் என்றால் ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் இந்தக் கதைதான் இவரால் எடுக்க முடியும் என்று முத்திரை குத்தி விடுவார்கள். இதிலிருந்து நான் மாறுபடவே விரும்புகிறேன் மாறுபட்ட கதைகளையே நான் இயக்க உள்ளேன் இதுதான் என்னுடைய விருப்பம் இயக்குனருக்கும் அதுதான் சேலஞ்சிங்கான விஷயமாக இருக்கும் என்று தெரிவித்தார்.