ETV Bharat / sitara

'தர்ஷன் மேல தப்பு இருக்கு' - சனம் ஷெட்டிக்கு அட்வைஸ் செய்த காஜல் - Actress Kaajal Pasupathi

தர்ஷன்-சனம் ஷெட்டி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை காஜல் பசுபதி, சனம் ஷெட்டியின் உண்மையான குறிக்கோள் என்ன எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

tharsan-sanam-shetty-issue
tharsan-sanam-shetty-issue
author img

By

Published : Feb 3, 2020, 2:48 PM IST

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடந்த 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் தர்ஷன்.

இவர், நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டியைக் காதலித்துவந்தார். இதனிடையே சமீபத்தில், தர்ஷன் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் சனம் ஷெட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், தற்போது தர்ஷன் தன்னைத் திருமணம் செய்ய மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்ததோடு, காவல் துறையினரிடம் புகாரளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இது குறித்து விளக்கமளித்த தர்ஷன், பச்சையப்பா சில்க்ஸ் விளம்பரத்தில் தான் நடித்தபோது, சனம் ஷெட்டி தனக்கு அறிமுகமானார் என்றும், ஆரம்ப காலங்களில் சினிமா தொழில் சார்ந்து தனக்கு சனம் ஷெட்டி அதிக அளவில் உதவிகளை செய்துள்ளார் எனவும் கூறியிருந்தார்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் தங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்ததாகவும், பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பின்னர், தான் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் படங்களில் அவரை கதாநாயகியாக்க தன்னை வற்புறுத்தினார் என்றும் தெரிவித்தார்.

tharsan-sanam-shetty-issue
தர்ஷன்-சனம் ஷெட்டி

அவரை உடனடியாகத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதோடு, தவறினால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டியதாகத் தர்ஷன் கூறியிருந்தார். சனம் கொடுக்கும் நிபந்தனைகளுக்கு தன்னால் ஈடுகொடுக்க முடியாததால், அவருடனான உறவை முறித்துக் கொண்டதாகவும், எந்த நோக்கத்துக்காக சனம் ஷெட்டி இவ்வாறு செய்கிறார் எனத் தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.

தர்ஷன், சனம் ஷெட்டி விவகாரம் திரையுலகில் விவாதப் பொருளாக மாறியிருக்கும் நிலையில், திரையுலகைச் சேர்ந்தவர்களும், பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் தர்ஷனுக்கும், சனம் ஷெட்டிக்கும் தொடர்ந்து அறிவுரை வழங்கிவருகின்றனர்.

இதனிடையே, நடிகையும், பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற நடன இயக்குநர் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் பசுபதி, இது குறித்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், 'தர்ஷன் மீது தவறு உள்ளதை நான் ஒப்புக்கொள்கிறேன். எனக்கு உங்களது உண்மையான குறிக்கோள் என்ன என்பதுதான் தெரியவில்லை. உங்களுக்கு அவர் மீண்டும் வேண்டுமா அல்லது அவரைக் கஷ்டப்படுத்த வேண்டுமா? காதலித்த ஒருவர் கஷ்டப்படுவதை எந்த ஒரு காதலியும் விரும்பமாட்டார்கள். உங்களுக்குப் புரிந்திருக்கும் என நம்புகிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

  • Tharshan Mela Tappu iruku sanam. I totally agree. What I really don't understand is what's ur actual intention? you want to get back to him or you want him to suffer?
    Love pannavanga kashtapadradha yendha loveryum virumbamaatanga. Hope you understand .https://t.co/fsQNfrciSB

    — Kaajal Pasupathi (@kaajalActress) February 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

காஜல் பசுபதியின் இந்த ட்வீட் பதிவு மீது கருத்து தெரிவித்துள்ள இணையவாசிகள் பலரும் தர்ஷன், சனம் ஷெட்டியை விமர்சித்துள்ளனர்.

இதையும் படிங்க...

கணவருடன் திருமண நாளைக் கொண்டாடி மகிழும் ஜெனிலியா

Intro:Body:

Tharshan Mela Tappu iruku sanam. I totally agree. What I really don't understand is what's ur actual intention? you want to get back to him or you want him to suffer? Love pannavanga kashtapadradha yendha loveryum virumbamaatanga. Hope you understand .

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Tharshan Mela Tappu iruku sanam. I totally agree. What I really don&#39;t understand is what&#39;s ur actual intention? you want to get back to him or you want him to suffer? <br>Love pannavanga kashtapadradha yendha loveryum virumbamaatanga. Hope you understand .<a href="https://t.co/fsQNfrciSB">https://t.co/fsQNfrciSB</a></p>&mdash; Kaajal Pasupathi (@kaajalActress) <a href="https://twitter.com/kaajalActress/status/1223888229151072256?ref_src=twsrc%5Etfw">February 2, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.