கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதை பொருள் விநியோகம் அதிகளவில் நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் முக்கிய கன்னட பிரபலங்கள் பலரும் வரிசையாக சிக்கிகொண்டு வருகின்றனர்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, ஹோட்டல் அதிபர்கள் விரேன் கண்ணா, முகமது அனூப், ராகுல் ஷெட்டி, பிரித்வி ஷெட்டி, முன்னாள் ஜனதா தள அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா உள்ளிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டு அவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். மேலும், பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராகினி, சஞ்சனா, விரேன் கன்னா, ராகுல் தோன்ஸ், ரவிசங்கர் ஆகிய ஐந்து பேருக்கு எதிராக பண மோசடி வழக்கு இருப்பதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதில் சஞ்சனா கல்ராணி பிங்கோ, ஹகுனா, போதை மருந்து பெட்லிங் உள்ளிட்ட சீனா செயலிகள் மூலம் சட்டவிரோதமாக பணம் பரிவர்த்தனைம் செய்து வருமானம் ஈட்டி உள்ளதாக அமலாக்க இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது.
பிங்கோ என்னும் செயலி கேசினோ விளையாட்டு போன்றது. இதில் மக்கள் ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்து சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவர். ஹகுனா செயலி போன் அழைப்புகள், சாட்டிங் போன்றவற்றை ரகசியமாக பராமரிக்க முடியும். இதுபோன்ற செயலிகளிலிருந்து இருந்து விசாரணைக்கு தேவையான தகவல்களை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை மூலம் சஞ்சனா வருமானம்: அமலாக்க இயக்குநரகம்
பெங்களூரு: நடிகை சஞ்சனா கல்ராணி சட்டவிரோத பண பரிவர்த்தனை மூலம் வருமானம் ஈட்டியுள்ளதை அமலாக்க இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது.