ETV Bharat / sitara

அமைச்சரிடம் ட்விட்டரில் கேள்வியெழுப்பிய இயக்குநர் கே.வி. ஆனந்த்

author img

By

Published : Aug 6, 2020, 8:32 PM IST

சென்னை: சோலார் சிஸ்டத்தை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசு பின்தங்கியிருப்பது ஏன் என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கு ட்விட்டர் வாயிலாக இயக்குநர் கே.வி. ஆனந்த் கேள்வியெழுப்பி உள்ளார்.

கே வி ஆனந்த்
கே வி ஆனந்த்

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான 'தென்மாவின் கொம்பத்' திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் கே.வி. ஆனந்த். இதன்பின் தமிழில் 'காதல் தேசம்', 'நேருக்கு நேர்', 'முதல்வன்', 'சிவாஜி' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். பின்னர் ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவான 'கனா கண்டேன்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இதன்பின் 'அயன்', 'கோ', 'மாற்றான்', 'காப்பான்' என பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் வலம்வர தொடங்கினார். தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதைக்களம், சமூக சிந்தனையுடன் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தைத் திரையில் கொடுப்பார்.

இந்நிலையில், கே.வி. ஆனந்த் தனது வீட்டின் மொட்டை மாடியில் மின்சாரப் பயன்பாட்டிற்காக சோலார் சிஸ்டத்தைப் பொருத்தியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, ”என் வீட்டு மொட்டை மாடியில் மின்சாரப் பயன்பாட்டுக்காக சோலார் நெட்மீட்டர் சிஸ்டத்தை பொருத்தியுள்ளேன். இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் 18 மாதங்களுக்கு முன்பு அனுமதி பெற்றேன்.

அதன்பிறகு ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டணங்களும் கட்டிவிட்டேன். ஆனால் இன்னும் இணைப்புக்காகக் காத்திருக்கிறேன். மின்சாரத்தின் மாற்று ஏற்பாடாக சூரிய ஒளி மூலம் இயங்கும் சோலார் சிஸ்டத்தை மற்ற மாநிலங்கள் ஊக்குவிக்கின்றன. ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியம் ஏன் இதில் பின்தங்கி இருக்கிறது?” என்று கூறி மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியை டேக் செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.