ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி. மாரிமுத்து இயக்கியுள்ள படம் 'தொரட்டி'. ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்திருந்தார்.
குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படம் பன்னாட்டு அளவில் நான்கு விருதுகளையும் பெற்றது.
இதையடுத்து மாரிமுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் சசிகுமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பெரும் பொருட்செலவில் டேவிட் ராஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, தென்காசி, உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது.
விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் சசிகுமாருடன் நடிக்கும் நடிகை, துணை கதாபாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.