ETV Bharat / sitara

விஜய்க்கு விரைவில் இரண்டாவது திருமணம்.. பொண்ணு இவங்களா...! - விஜய்

இயக்குநர் விஜய் விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

AL vijay
author img

By

Published : Jun 29, 2019, 1:46 PM IST

இயக்குநர் விஜய், தமிழில் அஜித் நடித்த 'கிரீடம்' படம் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'மதராசபட்டினம்', 'தெய்வதிருமகள்', 'சைவம்', 'தலைவா' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இதில், 'தெய்வதிருமகள்', 'தலைவா' படத்தில் நடிகை அமலா பால் நடித்திருந்தார். அப்போது விஜய்க்கும் அமலாபாலுக்கும் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான சில காலங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், தற்போது விஜய்க்கு இரண்டாம் திருமணம் நடைபெறவுள்ளது. விஜய் திருமணம் செய்ய உள்ள பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா. ஐரோப்பாவில் மருத்துவம் படித்த இவர், தற்பொழுது செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றுகிறார். தந்தையை இழந்த இவர், தனது தாய் மற்றும் சகோதரனுடன் கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

இருவீட்டாரின் சம்மதத்துடன் நடைபெறும் இந்தத் திருமணம் ஜூலை 11ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:மருத்துவரை மணமுடிக்கும் இயக்குனர் ஏ எல் விஜய்.

Body:மதராசபட்டினம், தெய்வதிருமகள், சைவம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ எல் விஜய். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருக்கும் நடிகை அமலாபாலுக்கும் காதல் திருமணம் முடிந்தது பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில், தற்போது ஏ எல் விஜய் க்கு இரண்டாம் திருமணம் நடைபெற உள்ளது. இருவீட்டாரின் சம்மதத்துடன் நடைபெறும் இந்த திருமணம் வரும் 11-ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ எல் விஜய் மணமுடிக்க உள்ள மணப்பெண் ஐஸ்வர்யா. இவர் ஒரு மருத்துவர். ஐரோப்பாவில் மருத்துவம் படித்த இவர் டெல்லியில் இந்திய மருத்துவத் துறையில் தகுதி பெரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் தேர்வு எழுதி தகுதி பெற்றுள்ளார். இவர் தற்பொழுது செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியில் உள்ளார் Conclusion:தந்தையை இழந்த இவர் தனது தாய் மற்றும் சகோதரனுடன் கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.