தெலுங்கில் மெகா ஹிட் அடித்த விஜய் தேவர கொண்டா நடிப்பில் வெளியான "அர்ஜூன் ரெட்டி" படத்தை, இயக்குநர் பாலா "வர்மா" என்ற தலைப்பில் தமிழில் இயக்கினார். "வர்மா" படத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுக கதாநாயகனாக நடித்திருந்தார். படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி படம் வெளியாக இருந்த நிலையில் 'வர்மா' திரைப்படம் வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தெலுங்கு படம் போல் விறுவிறுப்பாக இயக்கவில்லை, எதிர்பார்த்த அளவில் படத்தை பாலா இயக்கி தரவில்லை. அதனால் பாலா படத்தில் இருந்து நீக்கப்படுகிறார். வேறு இயக்குநர் மற்றும் புதிய நடிகர்களை வைத்து புதிதாக "வர்மா" படம் எடுக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது தொடர்பாக இயக்குநர் பாலாவும் தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தார். அதன் படி வர்மா படத்தில் இருந்து விலகிக்கொள்வது தான் மட்டுமே எடுத்த முடிவு என்றும், இது குறித்து முன்னதாகவே தயாரிப்பு நிறுவனத்திடம் அறிவித்தேன். தயாரிப்பாளர் தரப்பில் தரப்பட்ட தவறான தகவலால் இவ்விளக்கத்தை தர வேண்டிய நிலையில் உள்தாகவும், துருவ் விக்ரமின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதைப்பற்றி மேலும் பேச விருப்பமில்லை என்றும் அதில் தெரிவித்தார்..
பின் பல பிரச்சனைகளுக்கு இடையில் இப்படத்தை 'அர்ஜூன் ரெட்டி' பட இணை இயக்குநர் கிரியாசாயா 'ஆதித்யா வர்மா' என்ற பெயரில் இயக்கினார். இதில் துருவ் விக்ரமுடன் பாலிவுட் நடிகை பனிதா சாந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்து நவம்பர் மாதம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன.
-
#Varmaa Directed By #Bala & Starting #DhruvVikram Passed Singapore 🇸🇬 Censors with an #NC16 Rating (No Children Below 16)
— #Dhruvfied (@DhruvFan) February 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Consumer Advice : Some Drug Use & Sexual References
Runtime : 1hr 54 mins pic.twitter.com/gBG0rDDd0q
">#Varmaa Directed By #Bala & Starting #DhruvVikram Passed Singapore 🇸🇬 Censors with an #NC16 Rating (No Children Below 16)
— #Dhruvfied (@DhruvFan) February 27, 2020
Consumer Advice : Some Drug Use & Sexual References
Runtime : 1hr 54 mins pic.twitter.com/gBG0rDDd0q#Varmaa Directed By #Bala & Starting #DhruvVikram Passed Singapore 🇸🇬 Censors with an #NC16 Rating (No Children Below 16)
— #Dhruvfied (@DhruvFan) February 27, 2020
Consumer Advice : Some Drug Use & Sexual References
Runtime : 1hr 54 mins pic.twitter.com/gBG0rDDd0q
ஆதித்யா வர்மா வெளியாகினாலும் பாலாவின் வர்மா படத்தை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாலாவின் வர்மா திரைப்படத்தை இணையத்தில் வெளியிட முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து தற்போது வர்மா படத்துக்கு சிங்கப்பூர் தணிக்கை குழுவினர் 'NC16' சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதாவது இப்படத்தை 16 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கலாம். சில போதைப் பொருள்களின் உபயோகம், பாலியல் குறித்த காட்சிகள் இருப்பதால் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பார்க்க தடைவிதித்துள்ளனர். இதனால் இப்படம் சிங்கப்பூரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிங்க: பல சிக்கல்களுக்குப் பின் 'ஆதித்யா வர்மா', வெளிவந்தது இசை!