ETV Bharat / sitara

அசுரனை நெகிழவைத்த லண்டன் ரசிகர்கள் -வைரல் காணொலி - தனுஷை சந்தித்த லண்டன் ரசிகர்கள்

படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ள தனுஷை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

dhanush
author img

By

Published : Sep 20, 2019, 8:38 AM IST

'அசுரன்' பட வேலைகள் முடிந்துள்ள நிலையில், நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துவருகிறார். 2016ஆம் ஆண்டே தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கியதால் படப்பிடிப்புப் பணிகள் தள்ளிப்போனது.

சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் -தனுஷ் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த அறிவிப்பும் வெளியானது தனுஷ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் முக்கிய காட்சிகளை லண்டனில் படம்பிடிக்க படக்குழு திட்டமிட்டது. இதனால், தனுஷ் படப்பிடிப்பிற்காக லண்டன் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், தனுஷ் லண்டன் வந்திருப்பதை தெரிந்துகொண்ட லண்டன் வாழ் தமிழர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே சென்று தனுஷை சந்த்தித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் 200-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் படக்குழுவினர் மிரண்டுபோயுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, தனுஷ் லண்டன் ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். தனுஷ் லண்டன் ரசிகர்களை சந்தித்துப் பேசிய காணொலி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Intro:Body:

dhanush movie shoot in london, fan followers viral video

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.