ETV Bharat / sitara

’கர்ணனாக வாழ்ந்த தனுஷைக் கொண்டாடும் அனைவருக்கும் நன்றி’ - கர்ணன்

கர்ணன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பலருக்கும் நன்றி தெரிவித்து அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தனுஷ்
தனுஷ்
author img

By

Published : Apr 13, 2021, 8:51 AM IST

படப்பிடிப்பு தொடங்கிய நாளிலிருந்து படம் ரிலீசாகி, தற்போது வெற்றி நடைபோட்டுவரும் வேளை வரை ரசிகர்களிடையே தொடர்ந்து பெரிதும் பேசப்பட்டுவரும் திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ணன்' திரைப்படத்தில், ரெஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையரங்குகளில் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியான இப்படம், கரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கரோனா கட்டுப்பாடுகள் தற்போது மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையிலும், வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

தனுஷ்
தனுஷ்

இந்நிலையில், படம் வெளியாக, வெற்றியடைய உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”ரசிகர்கள் சொல்கிறபடி தனுஷ் கர்ணனாகவே வாழ்ந்த இத்திரைப்படத்தை காவியமாக ரசித்துக் கொண்டாடும் தாய்மார்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் அனைவருக்கும் எங்கள் அனைவரின் சார்பாக நன்றி.

கர்ணனின் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் இவர்களுடன் பணியாற்றும் அனைத்து உழைப்பாளிகளுக்கும் நன்றி. கர்ணனை கடைக்கோடி மக்களுக்கும் சிறப்பாகக் கொண்டுசேர்த்து பெருமைப்படுத்திய பத்திரிகை, ஊடகம், பண்பலை தொலைக்காட்சி, விமர்சகர்கள் அனைவருக்கும் நன்றி.

’கர்ணன்’ தனுஷ்
’கர்ணன்’ தனுஷ்

குறிப்பாக கர்ணன் என்ற வரலாற்று சிறப்புமிக்க திரைக்காவியத்தை நமக்கு அளித்த இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இத்திரைப்படத்தில் பங்குகொண்ட திரைக்கலைஞர்கள், ஊர் மக்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தனுஷ் சார்பாகவும், நற்பணி மன்றத்தின் சார்பாகவும் வாழ்த்தி கோடான கோடி நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ள்ளனர்.

இதையும் படிங்க: அது வெறும் நடிப்பு திட்டாதீங்கப்பா முடியல: 'கண்ணபிரான்' நட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.