தனுஷ் நடிப்பில் உருவான ‘3’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பிறகு ‘வேலையில்லா பட்டதாரி’, ‘தங்கமகன்’, ‘மாரி’ எனத் தொடர்ந்து தனுஷ் படங்களுக்கு அனிருத் இசையமைத்தார்.
இந்நிலையில் திடீரென கடந்த சில காலமாக இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருப்பதாகக் கோலிவுட் வட்டாரம் கிசுகிசுத்தது. தனுஷ் படங்களில் அனிருத் பணியாற்றவில்லை என்றாலும், விழா மேடைகளில் இருவரும் சேர்ந்துவந்து தங்களுக்குள் பிரச்னை இல்லை என்றனர்.
தற்போது தனுஷுடன் விரைவில் பணிபுரிவேன் என அனிருத் தெரிவித்துள்ளார். #AskAnirudh என்ற ஹேஷ்டேக்கின் மூலம் அனிருத் ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிவருகின்றனர். இதில் ஒரு ரசிகர், மீண்டும் தனுஷுடன் கூட்டணி எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அனிருத், நிஜமாக விரைவில் கூட்டணி அமைப்போம் எனப் பதிலளித்துள்ளார். இதனை தனுஷ் - அனிருத் காம்போ ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
-
#AskAnirudh Real soon! https://t.co/oFemWgCO0k
— Anirudh Ravichander (@anirudhofficial) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#AskAnirudh Real soon! https://t.co/oFemWgCO0k
— Anirudh Ravichander (@anirudhofficial) December 13, 2019#AskAnirudh Real soon! https://t.co/oFemWgCO0k
— Anirudh Ravichander (@anirudhofficial) December 13, 2019
இதையும் படிங்க: அற்புதமான குழந்தைப் பருவத்தை தந்ததற்கு நன்றி!