ETV Bharat / sitara

ஆஸ்கரே தேடிச்சென்று பெருமைகொண்ட நாயகன் லியனார்டோ டிகாப்ரியோவின் சாதனைப் பயணம்! - லியோ

தொட்டதெல்லாம் பொன்னாக அத்தனை வெற்றிகளை வாரிக்குவித்து முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர், தன் திரைத்துறைப் பயணத்தின் உச்சத்தில் இடைவேளை எடுத்துக் கொண்டு சமூகப் பணியாற்ற விழைந்த இடத்தில்தான், தான் நடிகன் என்பதைத் தாண்டி, சக நடிகர்களிலிருந்து மாறுபட்டு பொறுப்புமிக்க கலைஞனாய் உயர்ந்து நிற்கத் தொடங்கினார் லியோ!

Leonardo dicaprio's Oscar winning moment
author img

By

Published : Nov 11, 2019, 12:20 PM IST

Updated : Nov 11, 2019, 3:10 PM IST

சிறுவயது முதலே சினிமாவில் உழன்று, அர்ப்பணிப்புடன்கூடிய தன் நடிப்பிற்காக ஐந்து முறை ஆஸ்கருக்குச் சென்று நூலிழையில் அதைத் தவறவிட்டு ஆறாவது முறை ஆஸ்கர் வென்று தன் தனிப்பட்ட கனவோடு சேர்த்து, ஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்களின் கனவையும் நனவாக்குகிறான் ஒரு நாயகன்.

Leonardo Dicaprio
Leonardo Dicaprio in The Great Gatsby

சம காலத்தின் அற்புதக் கலைஞன்

தன் நெடுநாள் கனவு மேடையில் வெற்றிக் கூக்குரலிடாமல், ”காலநிலை மாற்றத்தை நாம் எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறோம்! சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் நாம் குரல் கொடுக்க வேண்டிய நேரமிது. இந்த பூமியை அலட்சியமாகக் கையாளாதீர்கள்!” என ஒட்டுமொத்த சமூகத்திற்கான குரலாக ஒலித்து சிறந்த மனிதனாக பெரும் கரகோஷத்தை அள்ளிய சம காலத்தின் அற்புதக் கலைஞன் லியனார்டோ டிகாப்ரியோவின் பிறந்த தினம் இன்று.

Leonardo Dicaprio
Leonardo Dicaprio in his childhood

லியனார்டோ பெயர் வர சுவாரஸ்ய நிகழ்வு

ரசிகர்களால் செல்லமாக ’லியோ’ என்றும் ’டிகாப்ரியோ’ என்று பெருமிதம் பொங்கவும் அழைக்கப்படும் லியனார்டோ டிகாப்ரியோவின் இந்தப் பெயருக்கான கதை சுவாரஸ்யமான ஒன்று. டிகாப்ரியோவின் தாய் மியூசியம் ஒன்றில், உலகம் போற்றும் ஓவியர் லியனார்டோ டாவின்சியின் ஓவியத்தின் முன்பு நின்று ரசித்துக்கொண்டிருந்தபோது கருவிலிருந்த குழந்தை உதைத்திருக்கிறது. தன் குழந்தை பிற்காலத்தில் உலகம் கொண்டாடும் கலைஞனாக வருவான் என முன்பே அறிந்ததாலோ என்னவோ, இந்த நிகழ்வைத் தொடர்ந்து, தன் கணவருடன் ஆலோசித்து, காலத்தால் அழியாத ஓவியர், பன்முகக் கலைஞர் லியனார்டோ டாவின்சியின் பெயரை வழங்கும் விதமாக தன் மகனுக்கு லியனார்டோ டிகாப்ரியோ எனப் பெயரிட்டிருக்கிறார் அவரின் தாய்.

Leonardo Dicaprio
Leonardo Dicaprio in his teens

கலிஃபோர்னியாவில் பிறந்த லியோ, மிகச்சிறு வயது முதலே எளிதில் பிறரின் நடை, உடை, பாவனைகளைப் பின்பற்றி நடித்துக் காட்டும் திறன்பெற்று பிறரைக் கவர்ந்திழுப்பதில் வல்லவர். தன் இரண்டு வயதில் கிடைத்த மேடையின் மூலம் மக்கள் கரகோஷத்தின் ருசியை அறிந்த லியோ, அதை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளத் தொடங்கினார்.

ஐந்து வயதில் தொடங்கிய நடிப்புப் பயணம்

தன் ஐந்து வயதில் குழந்தை நடிகராக தொலைக்காட்சித் தொடரின் மூலம் நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய லியோ கட்டுப்படுத்த முடியாத சுட்டித்தனத்தால் தனக்கு வந்த முதல் வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறார்! அடுத்தடுத்த வாய்ப்புகளைத் தக்கவைத்து, பின் தனது வளரிளம் பருவத்தில் அமெரிக்க விளம்பரங்கள், பிரபலமான தொலைக்காட்சித் தொடர்கள் என மக்களின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக பதியத் தொடங்கினார் லியோ.

Leonardo Dicaprio
Leonardo Dicaprio in Romeo - Juliet

ஹாலிவுட்டில் கால்தடம் பதித்து இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம்வந்த லியோ

1991 ஆம் ஆண்டில் ’க்ரிட்டர்ஸ் 3’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் கால்பதித்த லியோ, தன் கவர்ச்சியான தோற்றம், செய்கைகளின் மூலம் வெகு எளிதில் இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம்வரத் தொடங்கினார். ஆனால் அந்தத் தோற்றத்துடன் நின்றுவிடாமல், ’வாட்ஸ் ஈட்டிங் கில்பெர்ட் கிரேப்’ (What's eating Gilbert grape) என்ற திரைப்படத்தில் மனநலம் குன்றிய கதாபாத்திரத்தில் தன் தேர்ந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தி, உடன் நடித்த ’ஜானி டெப்’ என்னும் மாபெரும் ஆளுமையையும் தாண்டி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, தன் முதல் ஆஸ்கர் பரிந்துரையைப் பெற்றார்.

Leonardo Dicaprio
Leonardo Dicaprio with Kate Winslet

பயோபிக் படங்களின் முதல் தேர்வு லியோ

இதன்பின், பஸ் லஹர்மேன் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்களாலும் ரசிக்கப்பட்டு, ரோமியோ - ஜூலியட் உள்ளிட்ட பல புத்தகங்கள், வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களின் முதல் தேர்வாக விளங்கத் தொடங்கினார் லியோ. தன் குழந்தைப் பருவம் முதலே தான் கொண்டிருந்த, மனிதர்களை உள்வாங்கி அவர்களைப் போல் நடித்துக் காட்டும் திறமையை சரியான விதத்தில் பயன்படுத்தியதால்தான், புத்தகங்கள், வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட படங்கள், தனி நபர் சார்ந்த பயோபிக்குகளின் முதல் தேர்வாக லியோ விளங்கத் தொடங்கினார்.

சினிமா வாழ்க்கையை புரட்டிப்போட்ட டைட்டானிக்

தன் சாக்லேட் பாய் தோற்றத்தைத் தக்கவைத்துக்கொண்டும் அதே சமயம் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்தும் நடிக்கத் தொடங்கிய டிகாப்ரியோவின் சினிமா வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட திரைப்படம்தான் ’டைட்டானிக்’.

Leonardo Dicaprio
Leonardo Dicaprio in Titanic

இன்றளவும் உலகம் முழுவதும் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் ஒன்றாக விளங்கும் டைட்டானிக், லியனார்டோ டிகாப்ரியோவை உலகம் முழுவதிலுமுள்ள பட்டிதொட்டியெங்கும் கொண்டுசேர்த்து, சூப்பர்ஸ்டார் இமேஜையும் ’ஏ லிஸ்ட் நடிகர்கள்’ எனக் கொண்டாடப்படும் ஹாலிவுட்டின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவராகவும் மாற்றியது.

Leonardo Dicaprio
Leonardo Dicaprio with Titanic crew

டைட்டானிக் என்றதும் பிரமாண்ட கப்பல், அதன் பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் காமரூன், அழகு தேவதை கேத் வின்ஸ்லெட் ஆகியோரின் மத்தியில், பெய்ண்ட், பிரஷ் சகிதம் அலைபாயும் கண்களுடனும் வசீகரத் தோற்றத்துடனும் டைட்டானிக் கப்பலில் பயணிக்க உற்சாகம் பொங்க முதல் காட்சியில் குதித்தோடி வரும் 'ஜேக் டாஸன்' நம் மனதின் ஓரத்தில் தோன்றி நம்மைத் திரைக்குள் அவருடன் பயணிக்க இழுப்பதை எவராலும் மறுக்க முடியாது.

Leonardo Dicaprio
Leonardo Dicaprio in Catch me if you can

டிகாப்ரியோ தொட்ட நடிப்பின் உச்சம்

ஜேம்ஸ் காம்ரூன் என்னும் ஒரு பிரமாண்ட இயக்குநரின் மூலம் புகழின் உச்சியைத் தொட்டு, மற்றொரு பிரமாண்ட இயக்குநரான ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க்கின் ’கேட்ச் மீ இஃப் யூ கேன்’ (Catch me if you can) திரைப்படத்தின் மூலம் டிகாப்ரியோ தொட்டது நடிப்பின் உச்சம். 1960களில் காசோலை மோசடியில் ஈடுபட்டு, அமெரிக்க காவல் துறையினரை திக்குமுக்காடச் செய்த ’ஃப்ரேங்க் ஜூனியர் அபேக்னைல்’ என்னும் மனிதரின் கதாபாத்திரத்தை அவ்வளவு உணர்வுப்பூர்வமாகவும் ரசிக்கும்படியாகவும் உயிரைக்கொடுத்துக் கையாண்டு உடன் நடித்த ’டாம் ஹேங்ஸ்’ என்னும் மகா நடிகனைத் தாண்டி உலக சினிமா ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் லியோ. ஆனால் ஆஸ்கருக்கு தொடர்ந்து பரிந்துரைக்கப்படுவதும் நூலிழையில் அதைத் தவறவிடுவதும் மட்டும் தொடர்கதையாகிவந்த வண்ணம் இருந்தது.

Leonardo Dicaprio
Leonardo Dicaprio with Tom Hanks

நடிப்பில் எல்லைச் சுவரை உடைத்த லியோ

தி ஏவியேட்டர் (The Aviator), பிளட் டைமண்ட் (Blood Diamond), த டிபார்ட்டெடு (The Departed) எனத் தனது நடிப்புப் பயணத்தை தொடர்ந்த லியோவின் திரைப்படங்கள் வசூலிலும் சாதனைப் படைக்கத் தொடங்கின. தன் திரைப்படத் தேர்வுகளின் மூலம் ஹாலிவுட்டின் அதிக சம்பளம் பெறும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கத் தொடங்கிய லியோ, உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் மார்ட்டின் ஸ்கார்ஸிஸின் உளவியல், த்ரில்லர் ஷட்டர் ஐலேண்ட் (Shutter Island), க்ரிஸ்டோஃபர் நோலனின் அறிவியல் புனைவான இன்செப்ஷன் (Inception) போன்ற படங்களின் மூலம் தான் தொடாத ஜானர்களே இல்லை என்னும் அளவிற்கு தன் நடிப்புத் திறமையில் எல்லைகளை உடைத்தெறிந்து விரிவாக்கத் தொடங்கினார்.

இதையும் படிங்க: 'கிரேட்டா நம் காலத்துக்கான தலைவர்' - புகழ்ந்து தள்ளிய லியனார்டோ டிகாப்ரியோ

வில்லன் அவதாரம் எடுத்து பதைபதைக்க வைத்த டிகாப்ரியோ

இப்படி திரைத் துறைக்குள் நுழைவோர் உள்பட பலரால் தங்களின் ஐடியல் ஹீரோவாகக் கொண்டாடப்பட்டுவந்த லியோவின் அச்சுறுத்தும் வில்லன் அவதாரம் எடுத்து காண்போரைப் பதைபதைக்கவைத்தத் திரைப்படம்தான் ’ட்ஜேங்கோ அன்செய்ண்ட்’ (Django Unchained). கறுப்பின மக்களை அடிமைகளாக வைத்துத் தொழில் நடத்தும், ஒரு நிறவெறி பிடித்த பண்ணையாரின் குரூரத்தை, படத்தில் தன் இன்ட்ரோ காட்சியிலேயே தன் கண்களின் வழியே கடத்தியிருப்பார் லியோ!

Leonardo Dicaprio
Leonardo Dicaprio as Villain

2013ஆம் ஆண்டு மீண்டும் ஒரு புத்தகத்தைத் தழுவிய திரைப்படம். 1925ஆம் ஆண்டு வெளிவந்த, உலகம் முழுவதும் புகழ்பெற்ற காதல் காவியமான ’தி கிரேட் கேட்ஸ்பி’க்காக (The Great Gatsby), மீண்டும் பஸ் லஹர்மேனுடன் கைக்கோர்த்தார் லியோ. டெய்ஸி என்னும் பெண்ணை உருகி உருகிக் காதலிக்கும் பெரும் பணக்காரன் ஜே கேட்ஸ்பியாக நடித்த லியோ, படத்தில் சில வருடங்களுக்குப் பிறகு தன் காதலியை மீண்டும் சந்திக்கும் இடத்தில் வெளிப்படுத்தும் நடிப்பு, செல்லுலாய்ட் சினிமாவில் பதியப்பட்ட என்றைக்குமான கவிதைத்துவம் வாய்ந்த காட்சிகளுள் ஒன்று!

Leonardo Dicaprio
Leonardo Dicaprio in Shutter Island

தொட்டதையெல்லாம் பொன்னாக்கிய லியோ

தொடர்ந்து மார்ட்டின் ஸ்கார்ஸிஸுடன் மீண்டும் இணைந்து ’ தி வோல்ஃப் ஆஃப் தி வால் ஸ்ட்ரீட்’ (The Wolf of the wall street) என்னும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றிப்படத்தையும் கோல்டன் க்ளோப்பையும் அள்ளிய லியோ, தான் நடிப்பிலிருந்து சிறிதுகாலம் ஓய்வெடுத்துக் கொண்டு சுற்றுச்சூழலின் மீது கவனம் செலுத்தப் போவதாக அறிவித்தார். தொட்டதெல்லாம் பொன்னாக அத்தனை வெற்றிகளை வாரிக்குவித்து முன்னணி நடிகராக வலம்வந்த ஒரு நடிகர், தன் திரைத் துறைப் பயணத்தின் உச்சத்தில் இடைவேளை எடுத்துக் கொண்டு சமூகப் பணியாற்ற முன்வந்த இடத்தில் தான் வெறும் நடிகன் என்பதைத் தாண்டி, பிற நடிகர்களிலிருந்து மாறுபட்டு பொறுப்புமிக்க கலைஞனாய் உயர்ந்து நிற்கத் தொடங்கினார் லியோ!

Leonardo Dicaprio
Leonardo Dicaprio in The Wolf of wall Street

’தி ரெவனன்ட்’ படத்திற்காக ஆஸ்கர் விருதை முதன்முறையாக வென்ற லியோ

சிறு இடைவேளைக்குப் பிறகு தன் வாழ்வின் மிகக் கடினமான கதாபாத்திரம் என அவராலேயே விவரிக்கப்பட்ட தத்துவார்த்தத் திரைப்படமான ’தி ரெவனன்ட்’டில் (The Revenant), பனிக்காடுகளில் வாழ்வதற்காகப் போராடும் மனிதனாக நடித்திருந்தார் லியோ. இம்முறை உலகம் முழுவதிலுமிருந்த கோடிக்கணக்கான ரசிகர்களின் கடும் பிரார்த்தனைகளுக்கு ஏற்ப ’தி ரெவனன்ட்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை முதன்முறையாக வென்றார் லியோ.

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா ஒன்றில், ஒட்டுமொத்த நடிகர், நடிகையர் மாற்று யோசனையின்றி ஒருமித்த மனதோடு, கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரித்த, வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக லியனார்டோ டிகாப்ரியோவின் ஆஸ்கர் தருணம் அமைந்தது. ஆஸ்கர் அகாதெமி குழுவினருக்கு நன்றி தெரிவித்து லியோ பகிர்ந்த ட்வீட், இன்றளவும் குறைந்த கால இடைவேளையில் அதிகம் பகிரப்பட்ட ட்வீட்டுகளில் ஒன்றாக விளங்குகிறது.

Leonardo Dicaprio
Leonardo Dicaprio in The Revenant

நம்ம சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டுக்காக குரல்கொடுத்த டிகாப்ரியோ

டிகாப்ரியோவின் இந்த நீண்ட நெடும் பயணத்தில், பிற நடிகர்களைப்போல் அவரை, நாம் நடிகன் என்கின்ற அடையாளத்திற்குள் மட்டுமே அவ்வளவு எளிதில் அடைத்துவிட முடியாது. தனது தனிப்பட்ட வாழ்வில் திருமண உறவில் நுழையாமலும் குழந்தைகள் இன்றியும் வாழ்ந்துவரும் லியோ, எண்ணற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து, அவர்களைப் பேணிக்காத்துவருகிறார்.

அமேசான் காடுகளைப் பாதுகாக்க நிதியுதவி, தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத நம் சிங்காரச் சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டைப் பற்றி வருத்தம் தெரிவித்துக் குரல் எழுப்புவது, கால நிலை, அமைதிக்கான ஐநாவின் தூதராக செயல்பட்டது என நிஜ வாழ்விலும் தன்னை ஹீரோவாக முன்னெடுத்ததுதான் லியோவின் தனிப்பெரும் இயல்பும், அவரின் ஆகப்பெரும் வாழ்நாள் சாதனையும்.

லியோவை அடைய அந்த ஆஸ்கர்தான் கொடுத்துவைத்திருக்க வேண்டும்!

அன்று ஆஸ்கர் மேடையில் காலநிலை மாற்றம் பற்றி கவலைத் தெரிவித்த லியோவின் குரல் இன்றளவும் தொடர்ந்து, இன்னும் அதிகமாக ஓங்கி ஒலித்துவருகிறது. ஒவ்வொரு முறை லியோ ஆஸ்கரை நூலிழையில் தவறவிட்டபோதும் உலகம் முழுவதிலுமுள்ள அவரின் ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளமும் ஒருமித்த குரலாகத் தொடர்ந்து கூறிவந்த ஒரு விஷயம், 'லியோ ஆஸ்கர் பெறத் தகுதியானவர் இல்லை என்பது தவறு. ஆஸ்கர் லியோவை அடையக் கொடுத்து வைத்திருக்கவில்லை'. வரும் ஆண்டுகளில் லியோவைத் தேடிவந்து அடைந்து பெருமைப் பெற ஆஸ்கரை வாழ்த்துவோம்!

இதையும் படிங்க: 'அமேசான் தீ விபத்து மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது' - ஹாலிவுட் நடிகர் அதிருப்தி

Intro:Body:

Titanic hero Leonardo dicaprio birthday special

Conclusion:
Last Updated : Nov 11, 2019, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.