ETV Bharat / sitara

'பிகில்' படத்துக்கு போலி டிக்கெட் விற்ற ஆசாமிகள் கைது - நடிகர் கார்த்தி

தூத்துக்குடி: 'பிகில்' பட சிறப்புக் காட்சிக்கு போலி டிக்கெட் அச்சடித்து விற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

bigil movie fake tickets
author img

By

Published : Oct 25, 2019, 11:26 PM IST

தீபாவளி பண்டிகைக்கு ஒரு சில நாள்களே இருக்கும் நிலையில் தீபாவளி விருந்தாக நடிகர் விஜய்யின் 'பிகில்', நடிகர் கார்த்தியின் 'கைதி' ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் 'பிகில்' திரைப்படம் இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளன. இதில் குறிப்பிட்ட திரையரங்கில் சிறப்புக் காட்சிக்கு போலி டிக்கெட் அச்சடித்து கொடுத்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது 'பிகில்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு குறிப்பிட்ட திரையரங்கில் விநியோகிக்கப்பட்டிருந்த 800 டிக்கெட்டுகளுக்கு பதிலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டிருந்தனர் என்று கூறினார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், திரையரங்க ஊழியர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் உதவியுடன் சோதனை நடத்தினர்.

இதில் பல நபர்கள் போலி டிக்கெட் கொண்டுவந்திருப்பது தெரியவந்தது என்று தெரிவித்த பிரகாஷ், போலி டிக்கெட் அச்சடித்து விற்பனை செய்தது தொடர்பாக மோகன்பாபு, ஆனந்த்ராஜ், போலி டிக்கெட் அச்சடித்த நெல்லை அச்சக உரிமையாளர் உமர் பரூக், உதவியாளர் செல்வின் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

மேலும் மோகன்பாபுவிடமிருந்து 27 ஆயிரம் ரூபாய் பணம், 14 போலி டிக்கெட்டுகள், போலி டிக்கெட் அச்சடிக்க பயன்படுத்திய கணினி, எந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த்ராஜ், மோகன்பாபு ஆகியோர் ஏற்கனவே இதுபோல் பலமுறை போலி டிக்கெட்டுகள் அச்சடித்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது என்றார்.

போலி டிக்கெட்டுகள்

இதையும் படிங்க: உண்மையான விஜய் ரசிகர்கள் இதை செய்திருக்க மாட்டார்கள் - கஸ்தூரி

Intro:பிகில் பட சிறப்புக்காட்சிக்கு போலி டிக்கெட் அச்சடித்த 4 பேர் கைது - துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பேட்டி
Body:பிகில் பட சிறப்புக்காட்சிக்கு போலி டிக்கெட் அச்சடித்த 4 பேர் கைது - துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பேட்டி

தூத்துக்குடி

தீபாவளிக்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் தீபாவளி விருந்தாக நடிகர் விஜய் நடித்த பிகில், நடிகர் கார்த்தியின் கைதி திரை படங்கள் திரைக்கு வந்துள்ளன. தூத்துக்குடியில் பிகில் திரைப்படம் இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட திரையரங்கில் நிகில் பட சிறப்புக்காட்சிக்கு போலி டிக்கெட் அச்சடித்து கொடுத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது இந்த நிலையில் இன்று பிகில் திரைப்படத்தின் சிறப்புக்காட்சிக்கு குறிப்பிட்ட திரையரங்கில் வினியோகிக்கப்பட்டிருந்த 800 டிக்கெட்டுகளுக்கு பதிலாக 1000த்திற்கும் மேற்பட்ட பேர் திரண்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், திரையரங்க ஊழியர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உதவியுடன் சோதனை நடத்தினர். இதில் பல நபர்கள் போலி டிக்கெட் கொண்டுவந்திருப்பது தெரியவந்தது. போலி டிக்கெட் அச்சடித்து விற்பனை செய்தது தொடர்பாக மோகன்பாபு, ஆனந்த்ராஜ், போலி டிக்கெட் அச்சடித்த நெல்லை அச்சக உரிமையாளர் உமர் பரூக், உதவியாளர் செல்வின் முத்துராஜ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் மோகன்பாபுவிடமிருந்து 27 ஆயிரம் பணம், 14 போலி டிக்கெட், போலி டிக்கெட் அச்சடிக்க பயன்படுத்திய கணினி, எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது‌. கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த்ராஜ், மோகன்பாபு ஆகியோர் ஏற்கனவே இதுபோல் பலமுறை போலி டிக்கெட் அச்சடித்து கொடுத்து விசாரணையில் தெரியவந்தது என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.