ETV Bharat / sitara

’எஸ்.பி.பி.க்காக எங்களுடன் பிரார்த்தனை செய்யுங்கள்’ - ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்த பாரதிராஜா - Latest cinema news

எஸ்.பி.பாலசுப்ரமணியம் கரோனாவில் இருந்து மீண்டு வர இன்று (ஆக.20) கூட்டுப் பிரார்த்தனையில் பங்களிக்குமாறு ஊடகங்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரதிராஜா
பாரதிராஜா
author img

By

Published : Aug 20, 2020, 2:43 PM IST

Updated : Aug 20, 2020, 3:12 PM IST

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் குணமடைய வேண்டும் என்று வேண்டி, திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் இன்று (ஆக.20) மாலை 6 மணியிலிருந்து 6.05 வரை கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அன்புடைய ஊடக நண்பர்களே, அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் ஊடகம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன். ஒவ்வொரு கலைஞனின் வளர்ச்சிக்கும் ஊடகம் முக்கிய பங்கு வகுத்திருக்கிறது.

கலைஞர்களின் திறமைகளை நேரம் காலம் பார்க்காமல் ஓடி ஓடி எழுதி, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு செய்து அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இப்போதும் பல ஊடக நண்பர்களுடன் ஆரம்பக் காலத்திலிருந்து இப்போது வரை பயணித்துக்கொண்டே இருக்கிறேன். பல கட்டங்களில் எனக்கு பக்கபலமாக ஊடகங்கள் இருந்திருக்கின்றன.

என் நண்பன் உடல்நலம் குன்றி பாதிக்கப்பட்டுள்ளான். அவன் குணமாக வேண்டி இன்று நடைபெறவுள்ள கூட்டுப் பிரார்த்தனை செய்தியை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர் நீங்கள். நாங்கள் (பாரதிராஜா, இளையராஜா, ரஜினி, கமல், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான்) விடுத்த வேண்டுகோளை ஏற்று அனைத்துதரப்பு மக்களும் இதற்கு ஆதரவு அளித்து மாலை 6 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனைக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதை ஊடகங்கள் மூலமாகவே அறிந்தேன். இந்தளவுக்கு கொண்டுபோய் சேர்த்ததிற்கு உங்களுக்கு என் கரம்கூப்பி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றியுடன் சேர்த்து உங்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைக்கிறேன். தாங்களும், தங்களுடைய ஊடகங்களில் மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிபரப்பி பிரார்த்தனையில் எங்களுடன் இணையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இந்த கரோனா காலத்தில் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டி இருப்பதால், ஒவ்வொரு திரையுலகினர் வீட்டிற்கும் சென்று நீங்கள் ஒளிப்பதிவு செய்துகொள்வது என்பது முடியாத காரணமாகிறது. ஏனென்றால், நாம் அனைவருமே தகுந்த இடைவெளியை கடைபிடித்து நம்மை நாமே தற்காத்துக்கொள்ள வேண்டும்.

என் நண்பன் எஸ்.பி.பி.க்காக நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனை நல்லபடியாக நடந்து, வெற்றிகரமாக 'பாடும் நிலா' நலம்பெற வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் மக்களுடைய நோக்கம். இதில் எந்தவித இடைஞ்சலும் இடம்பெற்று விடக்கூடாது என்பதற்காகவே இந்த வேண்டுகோள். அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்" என்று பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Aug 20, 2020, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.