விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தளபதி 65’ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. புல்லட், டார்கெட், வெறித்தனம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக படத்தின் பெயரை கணிக்க, யாருக்கும் இல்லாமல் ‘பீஸ்ட்’ என படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரை பார்த்ததும் பூரிப்படைந்த ரசிகர்கள், படம் எப்படி இருக்கும், விஜய் என்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்ற சிந்தனைக்கு சென்றுவிட்டனர்.
மார்வெல் உருவாக்கிய x - men சீரிஸில் வரும் வுல்வரின் (லோகன்) போல வெள்ளை வெஸ்டில் விஜய் இருக்கிறார்.அந்தக் கதாபாத்திரம் போலவே விஜய் உடம்பை மெருகேற்றியிருப்பது தெரிகிறது. கேங்ஸ்டர், ரகசிய உளவாளி என பல்வேறு கணிப்புகள் எழுந்துள்ளன.
இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தும் வகை துப்பாக்கியை கையில் வைத்திருப்பதால், பயங்கரவாத தடுப்பு பிரிவைச் சேர்ந்தவராக விஜய் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடைபெற்றதால், விஜய் ஒரு சர்வதேச கேங்ஸ்டராக இருக்கக்கூடும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
சயின்ஸ் ஃபிக்சன் படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்பது விஜய்யின் நீண்டகால விருப்பமாம்; அதனால் இது அந்த ரகத்தைச் சேர்ந்த படமாகவும் இருக்கலாம் என்கின்றனர்.
டீசர், ட்ரெய்லர் ரிலீஸாகுறதுக்குள்ள நம்ம நெட்டிசன்களே தனியா ஸ்கிரீன்ப்ளே எழுதிருவாங்க போல; தளபதியின் பீஸ்ட் இன்னும் நிறைய கணிப்புகள் வரலாம். எது எப்படியோ டீசர், டிரெய்லர் வெளியாகும் வரை நாம் காத்திருக்கதான் வேண்டும்.
இதையும் படிங்க: பழங்குடியின மாணவர்களின் கல்விக்கு உதவும் மாளவிகா