ETV Bharat / sitara

மீண்டும் பாலா இயக்கத்தில் அதர்வா!

'பரதேசி' படத்தை அடுத்து இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் அதர்வா மீண்டும் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

author img

By

Published : Aug 12, 2021, 2:17 PM IST

பாலா இயக்கத்தில் அதர்வா
பாலா இயக்கத்தில் அதர்வா

பாலா இயக்கத்தில், அதர்வா நடித்து கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், 'பரதேசி'. ’ரெட் டீ’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றது.

தேசிய விருது வென்ற இப்படத்தில் நடித்த அனைவருக்கும் பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் மீண்டும் பாலா இயக்கத்தில் அதர்வா நடிக்க உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளதாகவும், நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்: படப்பிடிப்பு தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.