சென்னை: என்னிடம் கேட்காமல் அந்நியன் கதையை ரீமேக் செய்யக்கூடாது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியாகி ஹிட் அடித்த படம் அந்நியன். இப்படத்தை ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் எடுக்க உள்ளதாக ஷங்கர் அறிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், எழுத்தாளர் சுஜாதாவிடம் இருந்து அந்நியன் படத்தின் கதை உரிமையை பெற்றவன் நான். என்னிடம் கேட்காமல் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யக் கூடாது. பாய்ஸ் படத் தோல்வியால் துவண்டு போய் இருந்த ஷங்கருக்கு உதவும் விதமாக அந்நியன் படத்தை இயக்கும் வாய்ப்பை நான் வழங்கினேன். ஆனால், இப்போது என்னை கேட்காமலேயே இந்தியில் இயக்கும் முயற்சியை ஷங்கர் மேற்கொண்டு வருகிறார். இதை உடனடியாக நிறுத்தவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
![அந்நியன் இந்தி ரீமேக் - ஷங்கருக்கு புதிய சிக்கல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-anniyan-shankar-notice-script-7205221_15042021132829_1504f_1618473509_477.jpg)