ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜூன் தனது 16 நாள்கள் துபாய் சுற்று பயணத்தை முடித்துக்கொண்டு ஹைதராபாத் திரும்பினார்.
இந்நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் புஷ்பா படக் குழுவினர் வித்தியாச முறையில் பார்ட்டி ஒன்றை நடத்திக் கொண்டாடினர். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் செம்மரக் கட்டை கடத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதை நினைவுப்படுத்தும் வகையில் பார்ட்டி விழா அறையில் போலி சந்தனக் கட்டைகள், கோடாரிகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. மேலும் பார்ட்டியில் வைக்கப்பட்டிருந்த கேக்கில், படத்தின் பிரபலமான வசனமான ‘தக்கேதெலெ’ (எதற்கும் அடங்காதவன்) எனும் வசனம் எழுதப்பட்டிருந்தது.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
இடஹியும் படிங்க:'உலகின் இனிமையான புன்னகை'; கரோனா பாசிட்டிவை வித்தியாசமாக தெரிவித்த கஜோல்!