இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இரண்டாம் குத்து’. அடல்ட், த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தோஷ் ஜெயக்குமாரே நாயகனாகவும் நடித்திருந்தார்.
இவருடன் அக்ரிதி சிங், டேனியல், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டரும் டீசரும் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குக் கண்டனம் தெரிவிக்கும்வகையில் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் ரசிகர்களும் சமூக வலைதள வாசிகளும் படத்தின் போஸ்டரையும் டீசரையும் வைத்து கருத்து பதிவிட தொடங்கினார்.
இந்நிலையில், இந்தியாவின் முதல் பெண் தேசிய ரேஸிங் சாம்பியன் என்ற பெருமையை பெற்ற அலிஷா அப்துல்லா இப்படத்தை தடை செய்யுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அலிஷா, "'இரண்டாம் குத்து' படத்தின் டீசரை பார்த்தேன். உண்மையாக இது போன்ற படங்கள் தயாரிக்கப்படுவதை பார்க்கும்போது மனம் மிகவும் வருந்துகிறது. இதுபோன்ற திரைப்படங்களை எப்படி வெளியிட முடியும்?
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் இது போன்ற படங்களை திரையிட தடை செய்ய வேண்டும்" எனப் பதிவிட்டு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை டேக் செய்துள்ளார்.
'இரண்டாம் குத்து' திரைப்படத்திற்கு தடை - அலிஷா அப்துல்லா கோரிக்கை
சென்னை: 'இரண்டாம் குத்து' திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு அலிஷா அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.